Breaking News
recent

இந்தியாவில் பிறமதத்தவருடன் முஸ்லிம்கள் நல்லிணக்கமாக வாழ்கின்றனர்: மக்கா மசூதியின் தலைமை இமாம் புகழாரம்.!


இறைவனை வணங்க ஆதி மனிதர் ஆதம்(அலை) காலத்தில் உருவாக்கப்பட்டு, பின்னர் இபுறாஹிம்(அலை) காலத்தில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட ‘கஃபா’ எனப்படும் மக்கா மசூதியின் தலைமை இமாமாக (மதபோதகர்) பொறுப்பு வகிக்கும் இமாம் ஷேக் சாலே பின் முஹம்மது இப்றாஹிம் ஆல்-இ தாலிப் இந்தியா வந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோவில் நடைபெற்ற ’இஸ்லாமும் உலக அமைதியும்’ என்ற கருத்தரங்கில் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றிய அவர் கூறியதாவது:-
ஒட்டுமொத்த உலகமும் தீவிரவாதத்தால் அவதிப்பட்டு வருகிறது. ஒரு அப்பாவியை ஒருவன் கொன்றால் ஒட்டுமொத்த மனித இனத்தையே கொன்றதற்கு ஒப்பானதாகும் என புனித குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான். 
உலகில் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இங்குள்ள முஸ்லிம்கள் பிறமதத்தினருடன் அன்போடும், நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.