Breaking News
recent

துபாயில் தண்ணீர் உலகத்துக்குக் கீழே கட்டப்படவுள்ள டென்னிஸ் மைதானம்.!


டுபாய் நகரம் உலகில் மிக அதிகளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் நகரம் என்பதுடன் அங்குள்ள உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் பால்ம் தீவுகள் என்பவை உலகப் புகழ் பெற்றவை என்பது நீங்கள் அறிந்திருக்கக் கூடும்! 

அறியாத புதிய தகவல் ஒன்று! அதாவது உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் உலகத்தின் (water world) கீழ் மீன்களும் கடல் வாழ் உயிரினங்களும் சூழ அதன் கீழே டென்னிஸ் மைதானம் துபாயில் அமைக்கப் படவுள்ளது. 

போலிஷ் கட்டடக் கலைஞரான 30 வயதாகும் கொட்டாலா என்பவரது கனவுத் திட்டமாக இது அமையவுள்ளது. எனினும் இதை நிறைவேற்ற பலத்த சவால்கள் உள்ளதாக சில பொறியியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

மிக நீண்ட வளைந்த கண்ணாடிக் கூரையும், கணிசமான பார்வையாளர்கள் உள்வாங்கப் போதுமான இடத்தையும் நிர்மாணிப்பதே முக்கிய சவால்களாக உள்ளது. 

குறிப்பாக மிக நீண்ட, வலிமையான மற்றும் வளைந்த கண்ணாடிக் கூரையை உற்பத்தி செய்வதும் அதன் மூலம் அமைக்கப் படும் கூரை மிக வலிமையான தண்ணீரின் அழுத்தத்தால் உடைந்து விடாது இருப்பதும் மிகவும் சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது எனவும் அவர்கள் கூறுகின்றனர். 

எனினும் மிகக் கடின உழைப்பினாலும் திட்டத்தாலும் துபாயில் ஏற்கனவே உருவாக்கப் பட்ட பொறியியல் சின்னங்களான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் மனிதனால் உலகில் செயற்கையாக முதலில் நிர்மாணிக்கப் பட்ட மிக அழகான மற்றும் பெரிய தீவுக் கூட்டமான பால்ம் ஆகியவை குறித்த நிலக்கீழ் டென்னிஸ் விளையாட்டு மைதான அமைப்பும் முற்றிலும் இயலாத ஒன்று அல்ல என்ற நம்பிக்கையை இதைத் திட்டமிட்டுள்ள கட்டடக் கலைஞர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.