Breaking News
recent

உலகப் பெண்களே! பர்தாவுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?


ஓய்வு நேரத்தில் கணினி ஆய்வகத்தில் அமர்ந்துஇண்டர்நெட்டில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள் பொறியியல் மாணவி பாத்திமா. குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவளிடம்பாத்திமா.. உன்னை ஹெச்.ஓ.டி அவங்க ரூம்ல வந்து பாக்கச் சொன்னாங்கடி..’ என சொல்லிச் சென்றாள் பாத்திமாவின் வகுப்புத் தோழி திவ்யா.


உடனே கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டுஹெச்.ஓ.டி அறைக்குச் சென்ற பாத்திமா அறையின் வாசலில் நின்று கொண்டு மேய் ஐ கம் இன் மேடம்…’ என்றாள்.


ஹெச்.ஓ.டி திலகவதி எஸ்.. கம் இன்..’ என்று பதிலளித்து அறையினுள் வர அனுமதியளித்தார்.


மேடம் உங்களை வந்து பார்க்கச் சொன்னதா திவ்யா சொன்னா…’


எஸ்.. பாத்திமா நான்தான் வரச் சொன்னேன்.டேக் யுவர் சீட்..

தேங்க்யூ மேம்..


பாத்திமா.. வழக்கம்போல இந்த செமஸ்டர்லையும் நீதான் ஃபர்ஸ்ட் மார்க் போல…? என்றுஹெச்.ஓ.டி கேட்டதும் மலர்ந்த முகத்தோடு,‘ஆமாம் மேடம்..’ என்று பதிலளித்தாள் பாத்திமா.


ஹெச்.ஓ.டி,‘வெரி குட்.. கீப் இட் அப்..’ என்றதும் அதே முக மலர்ச்சியோடு,‘தேங்க்யூ சோ மச் மேடம்..’ என்றாள்.


அண்ட் ஒன் மோர் திங் பாத்திமா..நம்ம காலேஜ் ஸ்டூடன்ஸ் அசோசியேஷனுக்கு நீதானே செகரட்ரி..?


எஸ்.. மேடம்.. ஏன் கேட்கிறீங்க…?’


நம்ம காலேஜ்ல புதுசா ஒரு ரூல்ஸ் வரப் போகுது.. அதைப்பற்றி பேசத்தான் வரச் சொன்னேன்..என்று ஹெச்.ஓ.டி சொன்னதைக் கேட்டதும் காலேஜ் ரூல்ஸைப் பத்தி நம்மிடம் என்ன பேசப் போறாங்க..?’ என்று குழம்பிய பாத்திமா,


என்ன ரூல்ஸ் மேடம்..?காலேஜ் ரூல்ஸ் பற்றி என்னிடம் என்ன பேச வேண்டும்..?’ என்றுஹெச்.ஓ.டியிடம் நேரடியாகக் கேட்டாள்.


நேற்று நடந்த மீட்டிங்கில் பிரின்ஸ்பால் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வரப்போரதா சொன்னாங்க.. முஸ்லிம் ஸ்டூடன்ஸ் யாரும் இனிமேல் பர்தா போட்டுக் கொண்டு காலேஜ்க்கு வரக்கூடாதுனு ரூல் வரப் போகுதாம்.. இதைப்பற்றி ஏதாவது ஒரு முஸ்லிம் ஸ்டூடண்ட்கிட்ட பேசி அவங்க என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அதனால்தான் உன்னை வரச் சொன்னேன் பாத்திமா…’ என்று ஹெச்.ஓ.டி சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் பாத்திமா. 


என்ன மேடம் சொல்றீங்க..எதுக்கு திடீர்னு இப்படி ஒரு ரூல்;…?’


மத அடையாளங்கள் கல்லூரிக்குள் இருக்கக்கூடாதுமூடப் பழக்க வழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்க வேண்டும்பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வேண்டும்எல்லோரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த புது ரூலை கொண்டு வரப்போறாங்க…’ என்று ஹெச்.ஓ.டி சொல்லி முடிப்பதற்குள், ‘இது ரொம்ப அநியாயம் மேடம்…’என்று ஆவேசப்பட்டாள் பாத்திமா.


அநியாயமாஎன்ன சொல்ற பாத்திமாஇது ஒரு வகையில் உங்களுக்கு நன்மை தரக்கூடியவிஷயம்தானேஉங்க வீட்ல உன்னை கட்டாயப்படுத்தி பர்தா அணியச் சொல்றதுனாலதான நீ அணியுறா..இனி இந்த தொல்லை இல்லைனு நீ உண்மையில் சந்தோஷம்தான் அடையவேண்டும்…’


இல்லை மேடம் பர்தாவை நான் விரும்பித்தான் அணிகிறேன்.. என்னை பர்தா போடச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இஸ்லாத்தில் எந்த விஷயத்திலும் நிர்பந்தமும் இல்லை..’ என்று பாத்திமா சட்டென பதிலளித்தது ஹெச்.ஓ.டிக்கு வியப்பை ஏற்படுத்தியது. 


என்னதுபர்தாவை விரும்பித்தான் அணியுறியாபொய் சொல்லாதே பாத்திமா..


இல்லை மேடம்.. பொய் சொல்லவில்லை.. நிஜமாத்தான் சொல்றேன். பர்தாவை விரும்பித்தான்அணிகிறேன்… வேறு எந்த உடையிலும் கிடைக்காத கண்ணியம் எனக்கு இந்த உடையில்கிடைக்கிறது மேடம்..இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன்..சும்மா பேச்சுக்காகசொல்லவில்லை..


பாத்திமா மிகவும் யதார்த்தமாக பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஹெச்.ஓ.டி.,‘என்னைப்பொறுத்தவரை பர்தா என்பது பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வகைதான். இஸ்லாத்தில் உள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் எனக்கு இஸ்லாத்தில் பிடிக்காத ஒன்று பெண்களைத் திரையிட்டு மறைப்பதுதான்..’ என்றார். 


நீங்கள் தவறாக புரிந்திருக்கிறீர்கள் மேடம்.. பர்தா பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு அல்ல.. உண்மையில் பர்தா பெண்களை கௌரவிக்கத்தான் செய்கிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி திரையிட்டு மறைத்து அடிமைப்படுத்தவில்லை. இஸ்லாம் பெண்களுக்கு கல்வியுரிமை,சொத்துரிமைவிவாகாரத்து உரிமைதிருமணக் கொடையுரிமை என எத்தனையோ உரிமைகளை வழங்கி பெண்களை கௌரவிக்கிறது. அதே மாதிரிதான் மேடம் பர்தாவின் மூலமாகவும் இஸ்லாம் பெண்களை கண்ணியம் செய்கிறது…’


அப்படி என்ன கண்ணியம் இந்த பர்தாவில் இருக்கு…?’


எவ்வளவோ இருக்கு மேடம்ஒரு பெண்ணுக்கு எல்லா உரிமையையும் கொடுத்து அவளோடபாதுகாப்புக்கு கியாரண்டி தர்றதுதான் உண்மையான கண்ணியம்.. அந்த கண்ணியத்தை இஸ்லாம் பர்தா மூலமா பெண்களுக்கு வழங்கியிருக்குஅதைப் பற்றி சொல்றதுக்கு முன்னால பர்தானா என்னஅதோட வரைமுறை என்னவென்று நீங்க தெரிஞ்சுக்கணும் மேடம்…’


சொல்லு பாத்திமா.. தெரிஞ்சுக்குறேன்..


சொல்றேன் மேடம்.. நீங்க நினைக்கிற மாதிரி  இஸ்லாம் பெண்களை திரையிட்டு மறைக்கச்சொல்லவில்லை.. பெண்கள் தங்களோட முகம் மற்றும் இரண்டு முன் கைகள் மட்டும் தெரியும்படி ஆடை அணிய வேண்டுமென்றுதான் இஸ்லாம் சொல்லுதுஉலகத்துல இருக்கிற எல்லா பெண்களும் அந்தந்த நாட்டுல வழக்கத்துல இருக்குற ஆடைகளைத்தான் அணியுறாங்கபெண்களுக்கு ஒரு பிரத்யேகமான உடையை வடிவமைத்து இதைத்தான் உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிம் பெண்களும் அணிய வேண்டுமென்று இஸ்லாம் நிர்பந்திப்பதில்லை. இந்தியாவில் இருக்குற முஸ்லிம் பெண்களும் புடவைதான் கட்டுறாங்க..பெண்கள் விதவிதமானகலர்கலரான ஆடைகள் அணிவதையோதன்னை அழகு படுத்திக் கொள்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை.பெண்களின் இந்த சுதந்திரத்திலெல்லாம் இஸ்லாம் தலையிடவில்லை. இஸ்லாம் சொல்ற ஒரே கண்டிஷன் அந்நிய ஆண்களுக்கு முன்னாடி முகம் மற்றும் இரண்டு முன் கைகள் தவிர  மற்றபகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். எல்லா பெண்களை மாதிரியும் முஸ்லிம் பெண்கள் புடவைசுடிதார் போன்ற ஆடைகளை அணியத்தான் செய்கிறாங்க… தன்னை அழகுபடுத்திக் கொள்றாங்க… வெளியே எங்கையாவது போகும் போதுதான் பர்தா போடுறாங்க மேடம்… 24 மணிநேரமும் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டிருந்தால் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று நீங்கள் சொல்லாம்ஆனால் அந்நிய ஆண்கள் முன்னிலையில் மட்டுமே இஸ்லாம் சில வரையறைகளை கடைப்பிடிக்கச் சொல்லுது.. மற்றபடி வீட்டில் தன் தந்தைசகோதரர்கள் முன்னிலையிலும்கணவன் முன்னிலையிலும் கூட பர்தாவோடுதான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாதபோது எப்படி மேடம் பர்தாவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாகச் சொல்ல முடியும்?


ஓ.. அப்டினா ஒரு முழு நீள கருப்பு அங்கியால தலை முதல் பாதம் வரை உடலை மூடவேண்டுமென்று இஸ்லாம் சொல்லவில்லையா…?’ என்று ஹெச்.ஓ.டி கேட்டதும் லேசாக சிரித்த பாத்திமா தொடர்ந்து பேசினாள்.


இல்லை மேடம்.. டைட்டான டிரஸ்ஸா இல்லாமல்முகம்இரண்டு முன் கைகள் தவிர மற்றபாகங்கள் மறைந்திருக்க வேண்டும் என்பதுதான் சட்டம். எல்லா பெண்களும் புடவைசுடிதார் என தங்களுக்கு பிடித்த உடைகளை அணிந்து  கொள்கிறார்கள். வெளியே செல்லும் போது மட்டும் இஸ்லாம் சொல்ற மாதிரி உடல் பாகங்களை மறைப்பதற்கு பர்தாவை அணியுறாங்க.. இந்த முழு நீள அங்கி பெண்களோட சௌகரியத்துக்காக டிசைன் பண்ணப்பட்டிருக்கு மேடம்கருப்புக் கலர்லதான் பர்தா இருக்க வேண்டும் என்ற கண்டிஷன்லாம் கிடையாது. எந்தக் கலர்லா வேண்டுமானாலும் இருக்கலாம்..


நீ சொல்றதும் ஒரு வகையில் நியாயமாகத்தான் தெரியுதுஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி சொன்ன ஒரு விஷயம் இந்தக் காலத்துல அதுவும் இந்த நவீன உலகத்துக்கு சரியா வரும்னு நினைக்கிறியா பாத்திமா…?’


கண்டிப்பா மேடம்… சொல்லப்போனா இந்த காலத்துலதான் பர்தா ரொம்ப அவசியமா தேவைப்படுது.. பெண்களை சினிமாவிலும்டி.வி.லையும் ஆபாசமா காட்றது நாளுக்கு நாள்அதிகரிச்சுட்டே இருக்கு… ஆண்கள் மட்டுமே பயன்படுத்துற பொருட்களின் விளம்பரத்துக்குக் கூட பெண்கள் தேவைப்பட்றாங்க… பெண்களை போதைப் பொருளாக பார்க்கும் மனோபாவம் அதிகரிச்சுட்டே வருது… ஒரு பெண் ரோட்டுல நடந்து போறப்ப எத்தனையோ பேர் தப்பான எண்ணத்தோட பாக்குறாங்க.. பர்தா போட்டுட்டு போறதுனால அவங்களோட கழுகுப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும் மேடம்… நம்ம காலேஜ்ல கூட எத்தனையோ பெண்கள் தங்களை ஈவ் டீ சிங் பண்றதாகவும்பின்னாடியே சில ஆண்கள் வருவதாகவும் கம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்க.. ஆனால் பர்தா போட்டுக் கொண்டு வர்ற எந்தப் பெண்ணாவது இதுவரைக்கும் அந்த மாதிரிகம்ப்ளைண்ட் பண்ணியிருக்காங்களா மேடம்கம்ப்ளைண்ட் பண்ணியிருக்க மாட்டாங்க.. ஏன்னா.. பர்தா எங்களுக்கு ஒருவிதமான பாதுகாப்பைத் தருகிறது..எத்தனையோ பெண்கள் ஈவ் டீ சிங் மூலமா உயிரைக் கூட இழந்துருக்காங்க.. அந்த மாதிரி நிலைமை பர்தா போடுகிற பெண்களுக்குவந்ததில்லை மேடம்..  கிளாஸ் ரூம்ல கூட பசங்க என்ன மாதிரி பர்தா போட்டுவர்றபொண்ணுங்கள்ட கண்ணியமாதான் பேசுவாங்க மேடம்.. எங்களை கிண்டல் பண்றதெல்லாம்கிடையாது. இதுதான் மேடம் நான் சொன்ன கண்ணியம்…’என்று பாத்திமா பர்தாவின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போனாள்.


வாவ்.. இட்ஸ் இண்ட்ரஸ்டிங்க்பட்.. முகம்இரண்டு கைகளை மட்டும் தெரியும் அளவிற்கு ஆடை அணிவதுதான் பர்தாவின் வரைமுறைனு சொல்ற.. நாம நார்மலா அணியுற சுடிதார்கூட அந்த மாதிரிதான இருக்கு.. அதையே கவர்ச்சி இல்லாமே அணியலாமே..எக்ஸ்ட்ரா எதுக்கு அந்த பர்தா?என்று ஹெச்.ஓ.டி கேட்ட யதார்த்தமான கேள்விக்கு,


நீங்க கேட்பது சரிதான் மேடம்… பர்தாவுல கண்ணியம் மட்டும் இல்லை, பாதுகாப்பும் இருக்கு மேடம்.. பெண்கள் டூ வீலர்ல போறப்ப புடவையின் முந்தானைதுப்பட்டா சக்கரத்துல சிக்கி எத்தனையோ விபத்துகள் ஏற்படுதுஅதுபோல காற்றில் பறக்கும் தலைமுடிகள் முந்திச் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிற நிகழ்வுகளும்கூட நடக்கத்தான் செய்கிறது. பர்தா அணிந்து போகும் போது இதுமாதிரியாக விபத்துகள் ஏற்படுவதற்கு சான்ஸ்யே இருக்காது மேடம்..இதுமட்டுமில்லாமஎத்தனையோ வழிப்பறி கொள்ளைகள் நாட்டுல நடக்குதுதெருவில் நடந்து போகும் பெண்களின் கழுத்துல இருக்குற நகைகளை பைக்கில் வந்து அறுத்துட்டுப்போகிற சம்பவங்கள் தினசரி நடக்கிறதுபர்தா போட்றதுனால நமது கழுத்து பகுதிகளும் முழுவதும் மறைஞ்சிருக்கும்சோ.. இந்த மாதிரி வழிப்பறி பண்ணவே முடியாது. வழிப்பறிக்கு பயந்தே நிறையப் பேர் நகை அணியவே பயப்பட்றாங்க.. ஆனா வெளியில் போகும் போது நகைகளை அணிந்து பர்தா போட்டு மறைப்பதால் பாதுகாப்பை உணர முடியுது மேடம்…’ என்று சிறிதும் திணறாமல் சட்டென பதிலளித்தாள் பர்தாவின் சிறப்பை நன்கு அறிந்து வைத்திருந்த பாத்திமா.


வெரி நைஸ் பாத்திமா… பர்தா பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுனுதான் நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்.. ஆனால் இப்போ பர்தா பெண்களை கண்ணியப்படுத்துதுனு நீ சொன்ன கருத்தோட நானும் உடன்பட்றேன்… பட் மத அடையாளங்கள் கல்லூரிக்குள் இருக்கக்கூடாதுனு பிரின்ஸ்பால் சொல்றாங்களே...


முஸ்லிம் ஸ்டூடண்ட்ஸ் பர்தா போடக்கூடாதுனு ஒரு ரூல்ஸ் வரப்போறதுக்கு எத்தனையோகாரணங்கள் சொன்னீங்க.. மத அடையாளங்கள் கல்லூரிக்குள் இருக்கக்கூடாதுனு சொல்றீங்க.. ஆனா எல்லா இந்து ஸ்டூடண்டும் அவங்க மத வழக்கப்படி பொட்டு வைச்சுட்டுதான் காலேஜ்க்கு வர்றாங்க.. அதை யாருமே மத அடையாளமாக பார்க்கிறதுல்ல. பர்தாவை மட்டும் மத அடையாளமா பாக்குறது பாபாரபட்சம்தானே மேடம்..நமது இந்திய சட்டமே அவரவர் விரும்பிய மத பழக்க வழக்கத்தை பின்பற்ற முழு உரிமையும் வழங்கியிருக்கும்போது நம்ம காலேஜ்ல இந்த மாதிரி ரூல்ஸ் வரப்போறது எந்த விதத்திலும் நியாயாம் இல்லை மேடம். அடுத்து பர்தா அணிவதை மூடப் பழக்கம்னு சொன்னீங்க. மூடப் பழக்கமா இருந்தா அது முன்னேற்றத்திற்கும்,வெற்றிக்கும் தடையா இருக்கும். ஆனா பர்தாவால எந்த முன்னேற்றமும்வெற்றியும் பாதிப்பதில்லை மேடம்… தவக்குல் கர்மான் என்கிற அரேபியப் பெண் நோபல் பரிசு வாங்குற அளவுக்கு சாதிச்சுருக்காங்க.. அவங்க எப்போதும் பர்தாவோடதான் தன்னோட பணிகளில் ஈடுபட்ருக்காங்க.. அவங்க முன்னேற்றத்திற்கு பர்தா ஒருபோதும் தடையா இருந்தது இல்லை. அவங்களை மாதிரி எத்தனையோ பெண்களைப் பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் மேடம்…’


தேங்க்யூ பாத்திமா… என் மனசுல ஒரு தெளிவு பொறந்துருக்கு.. பர்தாவுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்குதுனு தெரிஞ்சுக்காம இத்தனை நாளா பிற்போக்குத் தனமா இருந்துட்டேன்.. பர்தாவை விமர்சிக்கிறதுதான் முற்போக்குத் தனம்னு நெனச்சது எவ்வளவு பெரிய தப்புனு இப்பத்தான் புரியுது… நல்லவேளை பாத்திமா.. உன்னை அழைத்து பேசியது நல்லதாப் போச்சுஇல்லைனா பிரின்ஸ்பால் கொண்டுவரப் போறதா சொன்ன ரூல்ஸ்க்கு நானும் ஓ.கே. சொல்லிருப்பேன்யூ டோண்ட் வொரி.. பிரின்ஸ்பாலிடம் எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி இந்த புது ரூல் வராம பாத்துக்குறது என்னோட பொறுப்பு… உன்னை கண்ணியப்படுத்துற பர்தாவுக்கு இன்னேல இருந்து நானும் சப்போர்ட்…’ என்று ஹெச்.ஓ.டி சொல்லியதைக் கேட்டு சந்தோஷமாகதேங்க்யூ மேடம்…’ என்று சொல்லிச் சென்ற பாத்திமா அணிந்திருந்த பர்தாவில் ஒரு பாதுகாப்பு அரண் இருப்பதாக உணர்ந்தார் ஹெச்.ஓ.டி திலகவதி.

-ராபியா குமாரன், புளியங்குடி.-
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.