Breaking News
recent

அஸ்ஸாமில் 90% வாக்குப்பதிவு. முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர்.!


அஸ்ஸாம் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் மிக அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளது.

திங்களன்று நடந்த வாக்குப்பதிவில் 61 இடங்களில் இதுவரை கண்டிராத 87.03% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவே அஸ்ஸாம்மின் மொத்தமுள்ள 126 இடங்களிள் வாக்குப்பதிவு சராசரியை 84.72% மாக உயர்த்தியுள்ளது. மீதம் உள்ள 65 இடங்களில் வாக்குப்பதிவு சராசரி 82.20 ஆக உள்ளது.

இன்னும் 8 இடங்களில் வாக்குப்பதிவு 90% த்துக்கும் மேலாக பதிவாகியுள்ளது. இந்த தேர்தலின் அதிக்கபப்டியான வாக்குப்பதிவுக்கு காரணம் முஸ்லிம்கள் அதிகளவில் வாக்களித்தது தான் என்று பத்திரிகையாளர் ஹைதர் ஹுசைன் கூறியுள்ளார். 

முஸ்லிம்களின் இத்தகைய அதிகளவிலான வாக்குப்பதிவு பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பர்தகாக இருக்கலாம், அல்லது காங்கிரஸ் மற்றும் AIUDF முஸ்லிம்களை தங்கள் வெற்றிக்காக வாக்களிக்க ஊக்கப்படுத்தியதாக் ஐருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனால் எப்படியாகினும், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக சிறுபான்மையினர் அதிகளவில் வாக்களிப்பது மக்கள் அரிசயல்வாதிகளுக்கு பாடம்புகட்ட தங்கள் கையில் உள்ள சிறந்த ஆயுதமான ஓட்டுரிமையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பது ஆறுதலான செய்தி.

ஒரு சமுதாயத்தின் பலன் வாக்குகளில் ஒருங்கிணைக்கப்படும் போது அதன் மேல் அரசியல்வாதிகளுக்கு உள்ள மதிப்பு அதிகரிக்கும். அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். அஸ்ஸாம் மக்களின் வாக்குப்பதிவு உணர்த்தும் இந்த செய்தியை தேர்தல் வரும் மாநிலங்களில் உள்ள மற்ற மக்கள் உணர்வார்களா?
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.