Breaking News
recent

துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி ஏப்ரல் 9ல் நிறைவு.!


துபாயில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘குளோபல் வில்லேஜ்’ (Global Village) கண்காட்சி  கடந்த வருடம் 2015  நவம்பர் மாதம் துவங்கியது. இக்கண்காட்சி 2016 ஏப்ரல் 9ந்தேதியுடன்  159 நாட்களுடன் நிறைவு பெறுகிறது. 

இவ்வருடத்திற்கான‌ இந்த கண்காட்சியில் 75நாடுகளுக்கு மேல் பங்கேற்றுள்ளனர்.உலகில் உள்ள‌ சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் தங்களது நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் அரங்குகளை அமைத்திருந்தனர்.

குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகளோடு  கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலக அதிசயமான இந்தியாவின் தாஜ் மஹால்  உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சின்னங்களின் மாதிரி வடிவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 


மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் சைக்கிள் ரிக்சாக்கள்,குதிரை வண்டிகள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. இவ்வருடமும் உலக நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான‌ மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள். 

இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்முகக் கலாச்சாரத்தை இந்த 6 மாத காலத்தில் காண முடியும்.இவருடமும் துபாய் அரசாங்கம் இக்கண்காட்சிக்கு வேண்டிய சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.