Breaking News
recent

சவூதி அரேபியா 61 இந்திய தமிழக மினவ தொழிலாளர்கள் சம்பள வழக்கில் இந்திய தூதரகம் சவூதி வழக்கறிஞர் நியமனம்.!


சவூதி அரேபியா 61 இந்திய தமிழக மினவ தொழிலாளர்கள் சம்பள வழக்கில் இந்திய தூதரகம் சவூதி வழக்கறிஞர் நியமனம்!

சவூதி அரேபியா ஜுபைல் மீன் பிடி துறைமுகத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றி வருபவர்கள் தமிழக மீனவர்கள்!

ஒரே நிறுவனத்தில் 25, 20, 15, 10, 8 என வருட வித்தியாசமாக பணியில் இருக்கும் இவர்கள் நிறுவன உரிமையாளரின் உரிமை மீறல்களால் அவதிப்படுகிறார்கள்!

சம்பள பாக்கி கடந்த வருடம் 2015 ல் நவம்பர் , டிசம்பர் மாதம் மற்றும் 2016 ஜனவரி மாதமும் நிலு வையில் உள்ளது!

ஒவ்வொருவரும் சராசரி  2000 ரியால்கள் மாத சம்பள பாக்கி உள்ளது!

பிப்ரவரி 2016 ல் இரால் சீசன் முடிந்ததும் விடுமுறையில் ஊருக்குச் செல்ல விரும்பிய தொழிலாளர்களை ஊருக்கு அனுப்ப உரிமையாளர் தயாராகவில்லை!

நான் விரும்பும் போதுதான் சம்பள பாக்கியையும் தந்து விடுமுறைக்கு ஊருக்குஅனுப்புவேன்!

அதற்கு முன் வேண்டுமானால் நீங்கள் இந்தியன் தூதரகத்துக்கோ சவூதி லேபர் கோர்ட்டுக்கோ போய் வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் என்று திமிராக சொல்லிவிட்டு போய்விட்டார்!

61 தொழிலாளர்களும் பிப்ரவரி 2016 முதல் கடல் மீன் பிடி பணியை நிறுத்திவிட்டு உரிமையாளரின் நல்ல முடிவுக்கு காத்திருந்தனர்!

இந்திய தூதரகத்தில் 61 பேரும் வழக்கு பதிவு செய்தனர்

இந்திய தூதரகம்  நடவடிக்கையைத் துவங்கியது!

தூதரக அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயல்வாளர் திரு அனில் நோட்டியால், உதவிச் செயலாளர்கள் திரு இராஜேந்திரன் திரு ஜார்ஜ் ஆகியோர்இந்த சம்பள பிரச்சனை வழக்ககை முனைப்படன் கையாளுகின்றனர்!

61 தொழிலாளர்களுக்கு தேவையான ஒருங்ிணைப்பு பணிகளைச் செய்ய தூதரக சமூக பணியாளரும், தமிழ் நாடு சமூக நல அமைப்பின் செயலாளருமான சுரேஷ் பாரதி மற்றும் ஜூபைல் பகுதி தூதரக சமூகப் பணியாளர் ஜெயன் தச்சம்பறா மற்றும் தூதரக சமூக பணியாளர் ஜுபைல் திரு சஜூதீன் யாவரையும் ரியாத் இந்திய தூதரகம் நியமித்துள்ளது!

மேலும் சவூதி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க இந்திய தூதரகம் சவூதி வழக்றிஞரை நியமித்துள்ளது!

பிரபல சவூதி வழக்கறிஞர் அப்துல் அசீஸ் அல் மகலஃப் அவர்கள் ஜூபைல் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து சப்பள பாக்கித் தொகையை பெற்றுத்தர முயற்சி எடுப்பதாக கூறியுள்ளார்

இவ்வேளையில் தூதரக நடவடிக்கையைத் தெரிந்து கொண்ட சவூதி உரிமையாளர் அவரது நண்பரை வைத்து தொழிலாளர் குழுவினருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

உரிமையாளர் சவூதியின் மருத்துவமனையிலள்ள தாயாரை கவனித்து வருகிறார், சில தினங்களி ல் அவர் வந்து 61 பேரின் சம்பள பாக்கியை தீர்தது வைப்பதாக வாய் மொழி நம்பிக்கை தந்துள்ளார்!

ஆனால் அவரின் போலியான வார்த்தைகளை தொழிலாளர்களில் பலர் நம்புதாக இல்லை என கூறினார்கள்!

தூதரகத்தின் வழக்கறிஞரின் மூலம் வழக்கு தொடர்வதை சில தொழிலாளர்கள் விரும்பவில்லை எனவும் தெரிகிறது!

அவரகள் அனைவரும் பாதுகாப்பாக நிறுவனத்தின் தங்கும் கட்டிட அறைகளிலே உள்ளனர்!

உணவுக்கு சிரமம் இல்லாமல் அருகிலுள்ள பிற கம்பனிகளைச் சார்ந்த தமிழக மீன்பிடி தொழிலாளர்கள், உறவினர்கள் உதவுகின்றனர்

சவூதியிலுள்ள தமிழக சேவை அமைப்புகள் ஜுபைல் மீன் பிடி தொழிலாளர்களுக்கு உதவ தயாராக உள்ளனர்!

தமிழக அரசும் மத்திய அரசும் 61 மீனவர் குடும்பங்களக்கும் அரசு நிவாரணத தொகை வழக்கினால் ஐந்து மாதமாய் சம்பளம் வராமல் பிள்ளைகளுக்கு பள்ளிக் கட்டணம் வழங்க சிரமபாபடம் குடும்பத்தினருக்கு உதவியாயிருக்கும்!

கடந்த 28 &29 மார்ச் தேதிகளில் கடும் காற்று கடலில் வீசியபோது நிறுவன உரிமையாளரின் மகனி்ன் தொலைபேசி அழைப்பையேற்று கட்டப் பட்டிருந்ந படகுகள் பாதிக்காமலிருக்க கேப்டன்கள் படகை கடலில் ஓட்டி காற்றடங்கியதும் கரை ஒதுக்கிவிட்டு நங்கூரம் பாய்ச்சி வந்தனர்

61 பேரும் நிர்வாகத்துடன் சுமூக மன நிலையிலேயுள்ளனர்!

இதற்கு முன்பும் உரிமையாளர் சம்பள பாக்ியை லைத்துவிட்டு ஒரு வருடம் கழித்து வழங்கியுள்ளார்!

உரிய நேரத்தில் தொழிலாளர்களை விடுமுறையில் அனுப்பாமலிருப்பது

மனைவி இறந்த போதும் தொழிலாளர் ஒருவருக்கு மனிதாபிமானம் அற்று அவரை ஊருக்கு அனுப்பாமலிருந்தது

அம்மா இறந்த தொழிலாளரைஊருக்கு அனுப்பாத உரிமையாளர்

ஒவ்வொரு வருடமும் இரால் சீசன் முடிந்த பின் ஊருக்கு போக விரும்பும் தொழிலாளர்ளை அனுப்பாமல் இரண்டு வருடம் கழித்து ஊருக்கு அனுப்புதல்

யாவும் நிர்வாகம் மீது 61 தொழிலாளர்களுக்கும் வேதனையையும்

தற்போதேனும் தூதரகம் மூலம நியாயம் கிடைக்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன்
காத்திருக்கிறார்கள்!

இந்நிலையில் 61 தொழிலாளர்களும் பணிக்குச் செல்லாததால் 12 மீன்பிடி படகுகளும் படகுத் துறையில் கட்டப்பட்டு்ளது!

தொழில் முடங்கிப் போயுள்ளதால் உரிமையாளர் சுமார் 50 புதிய விசாக்களை தமிழகத்துக்கு அனுப்பி மீனவ தொழிலாளர்களை வேலைக்கு எ டுத்து நிலமையை தனக்கு சாதகமான சூழ்நிலையாக்க முயலுகிறார்!

61 தொழிலாளர் பிரச்சனை தெரிந்ததால் பழக்கமான படகு கேப்டன் யாரும் இந்த விதி மீறல்  நிறுவனத்துக்கு செல்லாமல் எச்சரிக்கையாய் இருப்பதாக தகவல் வருகிறத!

தமிழக உள்ளூர் ஏஜன்ட்கள் இது போன்ற மனிதாபிமானமற்ற உரிமையாளர்களுக்கு ஆள் பிடித்துத் தரும் பணத்தாசை ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் இருக்க தமிழக அரசும் இந்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

விமான நிலையங்களில் இமிக்ரேஷன் துறை மீனவ தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் மற்றும் ரியாத் இந்திய தூதரக நிறுவன ஒப்பந்தம் மற்றும் மத்திய அரசின் இ-மைக்ரேஷன் ஒப்பந்தம் யாவற்றின் முறையான நகல்கள் இருந்தால் மட்டுமே  அனுமதி அளித்து விமானம் ஏற அனுமதியளிக்க வேண்டும்!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.