Breaking News
recent

துபாயில் மே 6-ம் தேதி ஈமான் சார்பில் தமிழக தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி.!


துபாயில் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில்வரும் மேமாதம் 06ந்தேதி அமீரகத்தில் பணியாற்றும் தமிழக‌ தொழிலாளர்களுக்கான வாலிபால் போட்டி துபாயில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற‌ (Salah AlDin Sports Hall) விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பிரசுரம் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் ஈமான் கல்சுச்சுரல் சென்டர் சார்பில் அதன் செயலாளர்கள் கீழக்கரை ஹமீது யாசின்,திருச்சி பைசுர் ரஹ்மான் பிரசுரத்தை வெளியிட அமீரகத்தில் செயல்படும் தனியார் பண்பலை குழுவினர் நிம்மி என்ற நிர்மல், நாகா, ராம் விக்டர், ப்ராவோ, கீர்த்தனா, ஹர்ஷா கார்த்திக் உள்ளிட்டோர் பெற்று கொண்டனர். 


யுஏஇல் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்கள் வாலிபால் போட்டிகளில் பங்கேற்க  விரும்புபவர்கள்  கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு ., சாதிக் , முஹைதீன், ஷமீம், ஹமீது யாசீன்

ஈமான் கல்ச்சுரல் சென்டர், துபாய்
தொடர்பு எண். 0506589305, 052 7778341 , 0509384746,

ஈமெயில் hameedyas@gmail.com⁠⁠,batchadxb@gmail.com
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.