Breaking News
recent

சவுதி அரேபியா-ஏமனில் வெள்ளம் 42 பேர் பலி.!


சவுதிஅரேபியாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் ரியாத், கெயில், மெக்கா, மதீனா, அல்-&பாகா, ஆசிர், நஜ்ரான், ஜகான் ஆகிய நகரங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

எனவே, அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது. இங்கு இதுவரை 915 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அல்-பாகா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கிய 27 பேர் காயத்துடன் மீட்கப் பட்டனர்.

சவுதிஅரேபியாவில் பெய்து வரும் மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே பலத்த மழை காரணமாக ரியாத்தில் அனைத்து பள்ளி களுக்கும் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது.

ஏமனின் வடக்கு பகுதி யிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகர் சனா வுக்கு வடக்கேயுள்ள அம்ரான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர்.


ஹஜ்ஜா மாகாணத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரி வில் சிக்கி 14 பேர் உயிரிழந் தனர். இந்த 2 மாகாணங்க ளிலும் மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பகுதி களில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

அல்-மாகவித் மாகாணத் தில் அணை உடைந்து ஊருக் குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகள், பாலங்கள் மற் றும் விளை நிலங்கள் பாதிக் கப்பட்டன. சவுதி அரேபியா மற்றும் ஏமனில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 42 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரானில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் ஏராள மான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழைக்கு 2 பேர் பலியாகினர். அங்கு தென் பகுதிக்கான அனைத்து ரெயில்களும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.