Breaking News
recent

துபாயினை தொடர்ந்து ஷார்ஜா விமான நிலையம் வழியாக இனிமுதல் எந்த நாட்டிற்கும் சென்றாலும் 35 Dirham வரி கட்ட வேண்டும்.!


இனிமுதல் துபாய் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையம் வழியாக பயணம் செய்ய உலகிலுள்ள எந்ந ஒரு பயணியும் 35 Dirham தாங்கள் எடுக்கும் பயணச்சீட்டுடன் சேர்ந்து செலுத்த வேண்டும். 

இந்த தொகையினை நீங்கள் டிக்கெட்டுக்கான செல்லும் கடையின் ஏஜென்ட் டிக்கட் கட்டணத்துடன் சேர்ந்து வசூலிப்பார்.
இது டாலர் மதிப்பில்$ 9.50 எனவும் KD மதிப்பில் 3.5
 KD எனவும் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 750 ரூபாய் இருக்கும்.

கடந்த வாரம் துபாய் இந்த அறிக்கை வெளியிட்டுள்ள நிலையத்தில் இன்று ஷார்ஜாவும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஷார்ஜாவில் இரண்டு வயத்திற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு இது பொருந்தாது.


ஜூன் 30 முதல் துபாயில் இது நடைமுறைக்கு வருகிறது. ஆனால் ஷார்ஜாவில் என்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் இனிமுதல் துபாய் மற்றும் ஷார்ஜா பயணம் செய்ய இந்த பணம் கட்டியே ஆகவேண்டும் இந்த கட்டண( TAX )விதிமுறை துபாய் வரலாற்றில் முதல் முறையாகஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015 துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக சுமார் 78 மில்லியன் மக்கள் பயணம் செய்துள்ளனர் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.