Breaking News
recent

சவுதியின் பொருளாதாரத்தை சீர்த்திருத்த புதுத்திட்டம், உலகெங்கும் 2 ட்ரில்லியன் டாலரை முதலிட திட்டம்.!


சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்த முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சவுதி அரேபியாவின் பொருளாதரக் கொள்கையில் சீர்த்திருத்தங்கள் வருகின்றன 

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த பதினைந்து ஆண்டுகளில், எண்ணெய் பொருளாதாரத்தை மட்டுமே நாடு சார்ந்திருக்கும் நிலையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்க புதிய திட்டம் விழைகிறது.

வரிகளை அதிகரித்து, அரச செலவினங்களைக் குறைக்க அரசு விரும்புகிறது. அதே சமயம் தனியார் வர்த்தகத்துக்கு பெரிய பங்கை அளிக்கவும் புதிய பொருளாதாரக் கொள்கை எண்ணியுள்ளது.

அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின்படி உலகெங்கும் முதலீடு செய்யும் நோக்கில், இரண்டு ட்ரில்லியன் டாலர் நிதியம் உருவாக்கப்படும்.

அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் பங்குகளை விற்று அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு இந்த நிதியத்துக்கு தேவையான ஆதாரங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.

எனினும் முதல் கட்டமாக அராம்கோவின் ஐந்து சதவீத பங்குகளை மட்டுமே விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.