Breaking News
recent

சவூதியில் 2 வேன்கள் மோதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலி.!(photos)


சவூதி அரேபியாவில் இரண்டு வேன்கள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சவூதி ரெட் கிரஸன்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அகமது அஸிரி கூறியதாவது: ஆஸிர் மாகாணம், வதி பின் ஹஸ்பல் பகுதியில், மெக்காவுக்கு 6 கிலோ மீட்டர் அருகே இரண்டு வேன்கள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

இதில், ஒரு வேன் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்தன.

இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். படுகாயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.