Breaking News
recent

வி.களத்தூரில் ஆவணமின்றி வேனில் எடுத்து சென்ற ரூ.1.64 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி.!


வி.களத்தூரில் நடந்த வாகன தணிக்கையில் ஆவணமின்றி வேனில்எடுத்துச் சென்ற  ரூ.1.64லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். 

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணினிப்புக் குழுவினர் தொடர் சோதனையில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வாக்காளர்களுக்குப் பணம் தருவதற்காக அரசியல்வாதிகள் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக இதுபோன்ற வாகனத்தணிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் தேர்தல் விதிகளின்படி ரூ50 ஆயிரத்திற்குமேல் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பறக்கும்படை அதிகாரியான, ஆலத்தூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பன்னீர்செல்வம் வேப்பந்தட்டைதாலுகா, வி.களத்தூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது அவ்வழியே சென்ற வேனை வழி மறித்து சோதனையிட்டதில், பிரபல மசாலாப்பொடி பாக்கெட்டுகளை இறக்குமதி செய்யும் வேனை ஓட்டிச்சென்ற அதன்டிரைவரான குரும்பலூர் பாளைத்தைச்சேர்ந்த ராமநாதன் என்பவர்,உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ1.64லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல்செய்தனர். 


பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர்அது பெரம்பலூர் சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.