Breaking News
recent

துபாயில் 11ந்தேதி ‘மேக் இன் இந்தியா’ அரங்கம் திறப்பு ! இந்திய‌ அமைச்சர் பங்கேற்கிறார்.!(photos)



துபாய் உலக வர்த்தக‌ மையத்தில் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகிற 11ந்தேதி தொடங்கி 13ந்தேதி  வரை மூன்று நாட்கள்  நடைபெறுகிறது . இக்கண்காட்சியில் மேக் இன் இந்தியா அரங்கம் அமைக்கப்படுகிறது. 

துபாய் இந்திய துணை தூதர் அனுராக் பூஷன் பதிரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது துபாய் உலக வர்த்தக‌ மையத்தில் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வருகிற 11ந்தேதி தொடங்கி 13ந்தெதி வரை மூன்று நாட்கள்  நடைபெறுகிறது . இக்கண்காட்சியில் மேக் இன் இந்தியா அரங்கம் அமைக்கப்படுகிறது. 

மேலும் இந்திய வர்த்தக  மற்றும் தொழில்துறை அமைச்சகம்,இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சபை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகளும் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் கலந்து கொள்கின்றன. இக்கண்காட்சியில் இந்திய அரங்கை  இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று திறந்து வைக்கிறார் .

இதில் அமீரக வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்த்துறை மந்திரி அப்துல்லா அல் சாலேவும் பங்கேற்கிறார். இதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 25 பேர் கொண்ட தொழில் குழுவினர் வருகின்றனர். இவர்கள் அமீரக முதலீட்டாளர்களை சந்தித்து இந்தியாவில் உள்ள தொழில் வசதிகள் குறித்து விளக்கி கூறுவர் ஏற்கனவே இந்திய அரசு 25 துறைகளில் முதலீடு செய்வதற்கு வழிமுறைகளை எளிதாக்கியுள்ளது. 

இந்தியாவில் மருத்துவ சுற்றுலா ,ஸ்மார் சிட்டி ,எண்ணெய்,எரி வாயும் ,தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குவிந்துள்ளது. எனவே முதலீட்டாளர்களை  கவர்ந்திழுக்கும் வகையில் இந்த கண்காட்சி ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும்  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முதலீட்டாளர்களுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் தாவூத் அல் சிராவி கூறியதாவது. இக்கண்காட்சியில் 30 நாடுகள் அரங்குகள் அமைக்கிறது.140 நாடுகளை சேர்ந்த 70 மந்திரிகள் மற்றும் உயர்மட்ட குழுவினர் இதனை பார்வையிட வருகின்றனர்.

இது அரசு துறைகளுக்கு இடையேயும் தொழிலதிபர்களுக்கு இடையேயும் இணைப்பினை ஏற்படுத்துவதற்கு பாலமாக அமையும் . யுஏஇ முக்கிய துறைகளான துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் ,துபாய் போலீஸ் ,வர்த்தக சபை ,துறைமுக நிறுவனம்  மற்றும் தனியார் நிறுவனங்களும் இக்கண்காட்சியில்ல் பங்கேற்கின்றன . 

இதனால் ஆரோக்கியமான வர்த்த உறவுகள் மேம்படுவதற்கு இக்கருத்தரங்கள் பெரும் உதவியாக இருக்கும் என்றார் இப்பேட்டியின் போது மேக் இன் இந்தியா திட்டம் குறித்த நூலை இந்திய துணை தூதர் அனுராக் பூஷன்  வெளியிட முதலீட்டாளர்களுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் தாவூத் அல் சிராவி பெற்று கொண்டார். நிகழ்ச்சியில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் முரளீதரன், சுமதி வாசுதேவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.