Breaking News
recent

கேரளாவில் கோவில் திருவிழா வெடி விபத்தில் 102 பேர் பலி.!(photos)


கேரளத்தின் கொல்லம் அருகே உள்ள கோயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதன் விளைவாக, தீயில் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 102 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பரவூர் புட்டிங்கல் தேவி கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதற்காக, பட்டாசுகள் வாங்கி இருப்பு வைப்பதும் வழக்கம்.

அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கிடங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதையடுத்து, அங்கிருந்த வெடிபொருள்கள் முற்றிலுமாக வெடித்துச் சிதறின. 

வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 86 பேர் உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். கோயில்களில் பட்டாசு வெடித்து விழாக்களைக் கொண்டாட மாவட்ட மட்டத்தில் தடை உள்ளது என்றாலும் வெடிவிடிக்க தற்காலிக அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 9-ம் தேதியன்று பட்டாசு வெடிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்தார். ஆனால் இது வெறும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்ல பட்டாசு வெடிப்பதில் பந்தய போட்டிகள் நடைபெறுவதாகும் என்று கலெக்டர் அனுமதி மறுத்திருந்தார். எனவே உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியிலும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரும் பக்தர்கள் ஆவர். இந்த வெடி விபத்து ஏற்பட்ட கிடங்குக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்துச் சிதறியது.கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தளர்த்தியுள்ளது.

விபத்தில் இறந்த சகோதரர்களின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடி ரத்தம் தேவைப்படுகிறது. இஸ்லாமிய இயக்கங்கள் களத்தில் இறங்கி இரத்ததானத்திற்கு ஏற்பாடு செய்வார்களாக!
தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண்கள்..
.
Tvm medi college
.
04712528300, 04712528647









.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.