Breaking News
recent

இந்தியா பாகிஸ்தான் T20 கிரிக்கட் போட்டியினால் மோதல் – அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர் மீது தாக்குதல்?


T 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதிக்கொண்ட வேலையில் உத்திர பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் இரு மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு மாணவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

இந்த மோதலின் போது துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அலிகார் முஸ்லிம் பல்கலைகழக பேராசிரியர் மோசின் கான் கருத்து தெரிவிக்கையில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் கிரிக்கட் விளையாட்டு வெற்றி கொண்டாட்டங்களின் போது நடந்த கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தவறுதலாக காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனை மறுத்துள்ள காவல்துறை அங்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் இதுவரை யாரும் புகார் ஏதும் அளிக்காததால் யாருக்கும் யாருக்கும் மோதல் ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று கூறியுள்ளது.

வடஇந்தியாவில் திருமணம் மற்றும் சந்தோமான தருணங்களில் கொண்டாட்ட துப்பாக்கி சூடுகள் நடப்பது வழக்கம் என்றும் அதிகாரிகள் அதனை தடை செய்துள்ள போதும் இன்னும் இந்த பழக்கம் பரவலாகவே உள்ளது என்றும் கூறப்படுகிறது.

உறுதி செய்யப்படாத சில தகவல்கள் கிரிக்கட் போட்டியில் இந்தியா வென்றதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் காஷ்மீரி மாணவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் அதில் களிம் அஹமத் என்ற மாணவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காயம்பட்ட மாணவர் களிம் அஹமத் நிலை மோசமடைந்ததால் சிகிச்சைக்காக டில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அனஷுள் குப்தா தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.