Breaking News
recent

IMO நன்மைகளும் தீமைகளும்.!


இன்றைய அதிநவீன வாழ்க்கையில் இணையத்தின் பயன்பாடு மிகவும் அத்தியாவசிமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இன்று கட்டிப்போடும் ஒன்றாக சமூக வலைத்தளங்கள் மாறியுள்ளன.

இன்றைய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இது மாற்றம் பெற்றுள்ளது. போட்டித்தன்மை வாய்ந்த உலகில் மென்பொருளின் (Apps) வருகை அதிதீவிரம் பெற்றுள்ளது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்திற்கு போட்டியான இன்று பல மென்பொருள் சந்தையில் விடப்பட்டுள்ளன.

அவற்றில் தற்போது பலரின் கவனத்தை ஈர்ந்துள்ள முக்கிய மென்பொருளாக IMO மாற்றம் பெற்றுள்ளது. முகப்புத்தகம் (Face Book), ஸ்கைப் (Skype), டுவிட்டர் (Twitter), வாட்ஸ்அப் (Whatsapp), வைபர், (Viber) போன்று IMO மென்பொருளும் மிகவும் வேகமாகவும், பிரபலமாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது.

அத்துடன் IMO மென்பொருள் தற்போது இரண்டு வகையில் அறிமுகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. IMO Beta (New version) 10 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. IMO (Old version) 100 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. இவ்வாறு இரண்டு வகையான IMO மென்பொருள்கள் உள்ளன. *IMO பயன்படுத்துவதன் நன்மைகள்

ஆரம்ப காலங்களில் ஸ்கைப் (Skype) மென்பொருளை பயன்படுத்தியவர்களுக்கு IMO பயன்படுத்துவது இலகுவாக உள்ளது. அத்துடன் இணையதளங்களை பயன்படுத்தும் போது செலவிடப்படும் டேட்டா (Data) குறைவாகவே காணப்படும் அதாவது ஸ்கைப்பிற்கு செலவிடப்படும் டேட்டாவை விடவும் IMOவுக்கு குறைந்த அளவிலான டேட்டாவே செலவாகிறது. 

நாம் பயன்படுத்தும் ஸ்மாட்போன்களின் தரைவிறக்கம் செய்து போது சிறியளவிலான கொள்ளளவையே IMO மென்பொருள் எடுத்துக் கொள்கிறது. அத்துடன் கையடக்க தொலைப்பேசியில் உரையாற்றும் போது வெளியாகும் தெளிவான ஒலியினை வாட்ஸ்அப் (Whats app) மற்றும் வைபர், (Viber) போன்ற வலைத்தளங்களில் பெற்றுகொள்ள முடியாது. 

எனினும் வாட்ஸ்அப் (Whats app), வைபர், (Viber) வலைத்தளங்களில் உரையாடும் போது தாமதமாகவே ஒளிகளை பெற்றுகொள்ள முடிகின்றது. ஆனால் அவ்விரண்டையும் விடவும் தெளிவான ஒலியினை பெற்றுகொள்ள IMO உதவுகின்றது. 

அத்துடன் தெளிவான காணொளி அழைப்புகளை (Video call) மேற்கொள்வதற்கு IMO உதவுகின்றது. குறைந்த செலவில் தெளிவாக காணொளி அழைப்புகளை பெற்றுகொள்வதற்கு IMO என்பது மிகவும் சிறந்த ஒரு தொடர்பாடல் மென்பொருளாகும்.

குறைந்த ஒளியில் துல்லியமான காணொளியை மற்றவருக்கும் வழங்கும் வகையில் இதன் கமரா கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைனில் அரட்டை அடிப்பவர்களுக்கு (Online chatting) நேரத்தை மகிழ்ச்சியாக போக்குவதற்கு வித்தியாசமான, ஏனைய தொடர்பாடல் வலைத்தளங்களை விடவும் அழகான ஸ்டிகர்ஸ்கள் (Stickers)வழங்கப்பட்டுள்ளன. 

கண்களை கவரும் நிறங்களில் ஸ்டிகர்களிலே உரையாடல்களை மேற்கொள்ளும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

IMO பயன்படுத்துவதன் போது அதிகளவு நன்மைகள் இருந்தாலும், அதற்கு இணையாக பல தீமைகளும் உள்ளமை மறுக்க முடியாத ஒன்றாகும்.

*IMO வின் தீமைகள்..*
எவ்வளவு தான் நன்மையான ஒரு பக்கத்தை ஒரு சமூக வலைத்தளம் கொண்டிருந்தாலும் அது பல தீமையான விடயங்களை கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும்.

பொதுவாக தேவையற்ற ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை எமது ஸ்மாட்போனில் பதிவு செய்து வைத்திருந்தால், நாம் IMO மென்பொருளை தரவிறக்கம் செய்து செயற்படுத்தும் வேளையில், நாம் IMO பயன்படுத்துகின்றோம் என்பதை மற்றவர்களுக்கு தன்னிச்சையாக காட்டிக் கொடுக்கும். இதன் மூலம் தேவையற்றவர்கள் எம்மை தொடர்பு கொள்ள நாமே வாய்பை ஏற்படுத்திக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

IMOவில் காணொளி பயன்பாடு மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளமையால், சாதாரண தொடுகையின் மூலம் மற்றவருக்கு காணொளி அழைப்பு செல்லும் அவல நிலை ஏற்படலாம்.

இது பெண்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாகும். ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு நம்பிக்கையானவருக்கு ஒரு அந்தரங்கமான காணொளியை பகிரும் போது, அது தவறுதலாக அனைத்து நண்பர்களுக்கும் செல்லும் ஆபத்தான நிலையும் காணப்படுகிறது.

IMOவை முதன்முறையாக பயன்படுத்துவோர் இது தொடர்பில் அவதானமாக செயற்படுவது நல்லது. இன்றைய காலகட்டத்தில் காதல் எனும் பெயரில் லீலைகள் புரியும் இருபாலாருக்கும் IMO வரபிரசாதமாக அமைந்தாலும், அதுவே அவர்களின் வாழ்வின் முடிவுக்கான ஆரம்ப புள்ளியாகவும் அமைந்து விடுகிறது.

IMO Beta பதிப்பினை பயன்படுத்துவோர் பகிரப்படும் காணொளிகள், புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறு பதிவு செய்யப்படும் அந்தரங்கமான பல விடயங்கள் மெமரிக் காட் மூலம் இன்னொருவரை சென்றடையக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

முகவரியற்றவர்களை முகப்புத்தகம் ஊடாக அறிமுகப்படுத்திக் கொள்ளும் பல இளைஞர்கள், யுவதிகள் IMO எனும் மென்பொருள் ஊடாக அந்தரங்களை பகிர்ந்து அவமானங்களை சுமந்து, தற்கொலை எனும் முடிவை எடுக்கும் படுபயங்கரமான நிலையும் இதன் ஊடாக ஏற்படுகிறது.

பொதுவாக நாம் IMO மற்றும் Whats app மென்பொருள்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் நேரடியாக நாம் அனுப்பு நபரின் தொலைப்பேசிக்கு அல்லது கணனிக்கு செல்வதில்லை. அவை அனைத்து சேவையகத்திற்கு (Server) சென்றதன் பின்னரே தொலைப்பேசி அல்லது கணனிக்கு செல்கின்றது. 

இன்று வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் காதலர் அல்லது வெளிநாட்டில் தொழில் செய்யும் தங்கள் கணவருக்கு பெண்கள் தங்களின் நிர்வாணப்படங்களை பகிர்கின்றார்கள். இது நேரடியாக அந்த நபருக்கு செல்லாதமையின் விளைவாக பல தற்கொலைகள் இடம்பெற ஆரம்பித்துள்ளது.


அத்துடன் இன்று IMOவில் ஒரு புதிய விடயம் ஒன்று உள்ளன. ஒரு நபருடைய கணக்கினை திறந்து பார்க்கும் போது கீழே ஒரு காணொளி குறியீடு காணப்படுகின்றது. அந்த காணொளியில் நமது விரல் தவறுதலாக பட்டாலும் குறுகிய காணொளி ஒன்று மற்றவருக்கு சென்றுவிடுகின்றது. அதனை அழிக்க முடியாது என்பது முக்கிய விடயமாகும்.

அத்துடன் நாம் ஒரு நபருடன் உரையாடல் மேற்கொண்டால் அதனையும் ஒரே நேரத்தில் அழித்து விட முடியாது. அதேபோல் நமது IMO கணக்கினை நாம் அழித்து விட்டாலும் நாம் அனுப்பிய தரவுகள் எதுவும் கணக்கில் இருந்து அழியாது.

நாம் மீண்டு ஒரு கணக்கினை புதிதாக அதே இலக்கத்தில் திறந்தால் பழைய பதிவுகள் எதுவும் அழியாமல் அவ்வாறே இருக்கும். கணக்கினை அதாவது Uninstall செய்தாலும் அந்த கணக்கு அழியாது என்பது இன்று பலருக்கு தெரியாது.

*பழைய பதிவுகளை எவ்வாறு அழிப்பது?*

IMO settings என்றதை அழுத்தினால் அதில் Delete chat history யை பயன்படுத்தி அவசியமற்றவைகளை அழித்துகொள்ள முடியும். அதேபோல் IMO கணக்கினை அழிப்பதற்கு IMO account setting சென்று Delete your IMO account என்பதன் ஊடாக உங்கள் கணக்கினை அழித்து கொள்ள முடியும்.

அதேபோல் IMO பயன்படுத்திய அனைவருக்கும் நிச்சியமாக முகம் தெரியாத அழைப்புகள் (Wrong call) வருவது சகஜமான ஒரு விடயம் என்று தான் கூற முடியும். இந்த அழைப்புகள் 80 வீதம் பெண்களுக்கே வருகின்றதென்பது குறிப்பிடத்தக்கது. 

எனவே தயவு செய்து அவ்வாறான அழைப்புகளுக்கு பதில் கொடுக்க வேண்டாம். தெரியாத இலக்கம் என்றால் மேல் உள்ள படத்தில் Blocked contacts என்ற ஒரு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது, அதற்குள் தெரியாத இலக்கத்தை பதிவு செய்து விடுங்கள். 

தயவு செய்து இணையதளங்களில் உங்கள் அந்தரங்கங்கள் பகிர்வதனை நிறுத்தினால் பாதிப்புகளில் இருந்து ஆரம்பத்திலே காப்பாற்றி கொள்ள முடியும். நன்மைக்காக மாத்திரம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பிரச்சினைகளை தவிர்த்துகொள்ளலாம். 

அழகு என்றால் ஆபத்துதான் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களும் பொருத்தும் என்பது உறுதியாகியுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.