Breaking News
recent

வாட்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்..? இதையும் அறிந்துகொள்ளுங்கள்.!


வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் சாதாரண மனிதனும் சாதனை படைக்கலாம் என்பது இந்திய  ரூ.27 ஆயிரம் கோடிக்கு அதிபதியான பிரியன் விஷயத்தில் நிரூபணம் ஆகியுள்ளது. 

அமெரிக்காவில் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட பிரியன் ஆக்டன், அதன் பின், யாஹூ இணையதள நிறுவனத்தில் 11 ஆண்டுகள் கடைநிலை ஊழியராக வேலை பார்த்தார். 

யாஹூ வேலை வெறுப்பு தட்டவே, கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலி பகுதியில் உள்ள பேஸ்புக், ட்விட்டர் உள்பட பல ஐ.டி நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்தார். நினைத்தபடி ஒரு நல்ல வேலையை யாரும் அளிக்கவில்லை.

 இதனிடையே, வயது அதிகரிக்கவே, வருமானம் இல்லாதது அவரது மனதில் அச்சம் ஏற்படுத்தியது. எனினும் தனது முயற்சியை பிரியன் கைவிடவில்லை. 

இந்த நிலையில், சமுக வலைதளங்களில் 140 எழுத்துகளில் குறுந்தகவல் எனும் ட்விட்டர், பேஸ்புக் உட்பட்ட இணையதள பயன்பாடுகளை கண்ட பிரியனுக்கு, திடீரென ஒரு யோசனை உண்டானது. 

அதனை செயலாக்கத்திற்கு கொண்டுவர அவர் திட்டமிட்டார். தன்னுடன் யாஹுவில் பணியாற்றிய நண்பருடன் இணைந்து தனது நிறுவனத்தை தொடங்கினார். 

இதுதான் வாட்ஸ் ஆப் நிறுவனம், கடந்த 2009ம் ஆண்டு தோன்றிய வரலாறு. வாட்ஸ் ஆப் துணை நிறுவனராக பிரியன் பின்னர் அறியப்பட்டார். 

ஐந்து ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு தங்களது நிறுவனத்தை விற்பனை செய்ய பிரியன் முன்வந்தார். 

இதையடுத்து ரூ.1.3 லட்சம் கோடி விலை கொடுத்து பேஸ்புக் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு வாட்ஸ் ஆப்பை வாங்கியது எல்லோரும் அறிந்தது. 

அதிக விலைதான் என்றாலும், அதற்கேற்ற பலன் பேஸ்புக்கிற்கு கிடைத்திருப்பதாக கூறியுள்ள பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் ஆப் நிறுவனம் தனித்தே இயங்கும் என அறிவித்தது. 

வாட்ஸ் ஆப் விற்பனை மூலமாக பிரியனுக்கு கிடைத்துள்ள ரூ.27 ஆயிரம் கோடி பங்குகள்தான் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

ஆறு இலக்க சம்பளம் கிடைக்குமா என அலைந்தது போக பல இலக்க லாபம் அடைந்துள்ள பிரியனின் முயற்சியை பலரும் பாராட்டி உள்ளனர். 

வேலை கிடைக்கவில்லையே என விரக்தி அடையாமல், கிடைத்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி பிரியன் முன்னேற்றம் அடைந்துள்ளார் என அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.