Breaking News
recent

வாட்ஸ் அப்பில் தடிமன், சாய்ந்த எழுத்துகளை அனுப்புவது எப்படி.!


குறுஞ்செய்திகளை அனுப்பிய காலத்தை கடந்து, நவின தொழில்நுட்பத்தால், செல்பேசி வழி தகவல் பரிமாற்றம் எளிதாக்கப்பட்டுவிட்டது.

இன்று செல்பேசியில் உலகளாவிய தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் மிக முக்கிய பங்காற்றுகிறது.

எழுத்துகளாகவும், படங்களாகவும், ஒளி, ஒலி வடிவிலும் தகவல்களை எளிதாக அனுப்பும் வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது.

தற்போது புதிய வரவாக, எழுத்துகளாக அனுப்பும் தகவல்களுக்கு மெருகூட்டும் விதமாக தடிமன், சாய்ந்த, குறுக்குகோடிட்ட எழுத்துகளையும் அனுப்ப முடியும்.

இதற்கான அறிவிப்பை அண்மையில் அறிவித்த வாட்ஸ் அப், தனது புதிய பதிப்பில் சேர்த்து பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது.

ஐஓஎஸ் இயங்குதளங்களில் இயங்கும் வாட்ஸ் அப்பில் புதிய வசதிகளை பயன்படுத்தலாம்.

மற்றசெல்பேசிகளில் www.whatsapp.com அல்லது https://play.google.com/apps/testing/com.whatsapp என்ற இணைப்புக்கு சென்று வாட்ஸ் அப் 2.12.560 என்ற பதிப்பை பதிவிறக்கி பயன்படுத்தலாம். அதாவது பீட்டா எனப்படும் சோதனை பதிப்பில் இருந்து புதிய வசதிகளை பயன்படுத்தலாம்.

சரி. இப்போது பதிவிறக்கிக்கொண்டவர்கள், எப்படி விதவிதமான எழுத்துகளில் தகவல்களை அனுப்புவது என்று கேட்கிறீர்களா..?

கீழ்காணும் முறையில் எழுத்துகளை தட்டச்சு செய்தால் போதும். தடிமன், சாய்வு, குறுக்கு கோடு உள்ளிட்டவை கிடைத்துவிடும்.

தடிமன் : *தடிமன்*
சாய்வு : _சாய்வு_
தடிமன்சாய்வு : _*தடிமன்சாய்வு*_
குறுக்குகோடு : ~குறுக்குகோடு~

அதாவது ~_* ஆகிய குறியீடுகளை பயன்படுத்தி, எழுத்தை அலங்கரிக்கலாம்.

நீங்கள் அனுப்பும் மேம்படுத்தப்பட்ட எழுத்துகளை பெறுபவர்களும், வாட்ஸ் அப்பின் புதிய பதிப்பிற்கு மாறியிருக்க வேண்டும். இல்லையென்றால், குறியீடுகளாகதான் தெரியும்.

அண்மைக்காலமாக, வாட்ஸ் அப்பில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.