Breaking News
recent

பெற்றோர்களின் அன்பான கவனத்திற்கு.!


பள்ளிப்படிப்பை அன்றும் இன்றும் என்றும் என்ற கணக்கில் நோக்கினால், அன்றைய காலத்தை விட இன்றைய காலத்தில் மிக மிக அத்தியாவசியமாக இருக்கின்றது. இன்று படித்தால் தான் என்ற நிலை வந்து விட்டது. அன்று படிக்காதவர்கள்கூட  மாப்பிள்ளை வேஷம் போட்டார்கள், இன்று படித்தால் தான் மாப்பிள்ளை வேஷம் போடமுடியும்.

அன்று ஏதோ என்ற கணக்கில் பள்ளிப் படிப்பை முழுவதும் படிக்காமல் பாதியிலேயே நிறுத்தியவர்களும் உண்டு. பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொள்ளாமல் முழுவதும் படித்தவர்களும் உண்டு.

அன்று டியூஷன் என்று சொன்னால் மிக மிக சிலரே படித்தனர், அதுவும் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு வந்து படித்து கொடுத்தனர். ஒரு நயா பைசா வாங்காமல் இலவசமாக படித்து கொடுத்தார்கள்.

இன்று அப்படி இல்லை. எல்லாப் பள்ளி மாணவ மாணவிகளும் கட்டாயம் டியூஷன் படித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், காரணம் பள்ளிகளில் படித்துக் கொடுக்கும் இன்றைய ஆசிரியர்/ஆசிரியைகளின் நிலையும் அப்படித்தான் இருக்குது, அதாவது மாணவ மாணவிகள் டியூஷன் படித்தால்தான் பிள்ளைகள் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.

அதன்படி, இன்று பள்ளி ஆசிரியப்பெருமக்களும் சரி, மற்றும் தனியார் ஆசியர்/ஆசிரியைமார்களும் மாணவ மாணவிகளை தங்களின் வீடுகளுக்கு வரவழைத்து டியூஷன் சொல்லிக் கொடுத்து மாதம் ஒரு தொகையை ஒவ்வொருவரிடமும் வசூல் செய்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு தெருக்களிலும், நகரங்களிலும் நாங்களும் டியூஷன் படித்துக் கொடுக்குறோம் என்று போர்டு போட்டு மாணவ மாணவிகளை ஈர்க்கின்றனர்.

பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகள் டியூஷன் படிக்கும் இடத்தில் எப்படி இருக்கின்றது? எந்த மாதிரி நடத்தப்படுகிறது? எவ்வாறு படிக்கின்றது? வேறு ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா? என்று நீங்கள் என்றைக்காவது போய் ஆராய்ந்து பார்த்தது உண்டா? அல்லது விசாரித்தது உண்டா? அல்லது வேறு யாரிடமாவது கேள்விப்பட்டது உண்டா? அல்லது கேட்டு தெரிந்து கொண்டது உண்டா?

இல்லை.

நீங்கள் அப்படி ஏதும் முயன்று இருக்க மாட்டீர்கள். உங்கள் பிள்ளைகள் டியூஷன் போகின்றார்கள், பிறகு வீடு திரும்பி வருகின்றார்கள் அதுதான் உங்களுக்கு தெரியும். தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் நீங்கள் டியூஷன் படித்துக் கொடுக்கும் இடத்தில் போய் ஆராய்ந்து பார்க்க வேண்டியது உங்களின் கடமையாக இருக்கின்றது.

டியூஷன் படித்துக் கொடுக்கும் இடம் எப்படி இருக்கின்றது? பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா? எத்தனை பிள்ளைகளை வைத்து டியூஷன் சொல்லிக் கொடுக்கப்படுகிறது? அளவுக்கு அதிகமான பிள்ளைகளை வைத்து சொல்லிக் கொடுக்கப்படுகிறதா? காற்றோட்டமான இடமா? அல்லது இறுக்கமான இடமா? சுற்று சூழல் சுகாதாரம், இன்னும் நிறைய இருக்கின்றது, அவை எல்லாவற்றையையும் விசாரிப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையாக இருக்கின்றது.

மேலும் டியூஷனுக்கு வரும் பிள்ளைகளை வீட்டு வேலைகளை செய்ய சொல்லுவார்கள், பெற்றோர்களே மிக கவனம்.

காலம் கடந்தது கடந்ததாக இருக்கட்டும், என்றாலும் இன்றையிலிருந்து நீங்கள் உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் விழிப்புணர்வோடு இருப்பது மிக மிக அவசியம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.