Breaking News
recent

திருமணம், கட்சி விழாக்கள் முடிந்த பின்னர் பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்பாட்டாளர்கள் அகற்றாவிட்டால் அபராதம்: மத்திய அரசு அறிவிப்பு.,!


புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், நேற்று வெளியிட்டது.

இந்த விதிகளில் கிராமப்புறங்களும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் வரம்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட கடைகள், தெரு வியாபாரிகள் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, பிளாஸ்டிக் பைகள் வழங்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பைகளில் அவை உற்பத்தி செய்யப்பட்ட இடம், தேதி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இடம் பெறாவிட்டால் அவற்றை வழங்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இந்த விதிமுறைகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* திருமணம், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள், பிற நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகிறபோது, அவை முடிந்தபின்னர் அந்த இடத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும். அவற்றை அகற்றாவிட்டால், அவற்றின் ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

* பிளாஸ்டிக் பைகளின் குறைந்தபட்ச தடிமன் 40 மைக்ரானில் இருந்து 50 மைக்ரானாக உயர்த்தப்படுகிறது.

* 50 மைக்ரான் அளவுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படுகின்றன.

* 2 வருடங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பன்னடுக்கு பிளாஸ்டிக் பல கட்டங்களாக ஒழிக்கப்படும்.

* பிளாஸ்டிக் பைகளை தயாரிப்பவர்கள், பைகள், ஷீட்டுகள் தயாரிப்பதற்கு தாங்கள் யார், யாருக்கு கச்சா பொருட்களை சப்ளை செய்கிறார்கள் என்பது பற்றிய பட்டியலை பராமரிக்க வேண்டும்.

இந்த தகவல்களை மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.