Breaking News
recent

இனி, சிறிய பணத் தேவைகளுக்காக யாரையும் எதிபார்க்க தேவையில்லை - மொபைல் ஆப் மூலம் பணம் பெறும் புதிய வசதி அறிமுகம்.!


நம்பமுடியவில்லையா? ஆம் இப்போது ஒரு மொபைல் ஆப், நமது கஷ்ட சூழ்நிலையில் பணம் தந்து உதவப் போகிறது.

Earlysalary.com என்ற மொபைல் ஆப் இன்று பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதக் கடைசியில் பணத்திற்காக அல்லல்படும் நடுத்தரவர்க்கத்தினருக்காக, முக்கியமாக அலுவலகம் செல்லும் இளைஞர்களுக்கான வரப்பிரசாதம் தான் இந்த ஆப்.

ஊதியம் பெறும் தனிநபர்களுக்காக குறுகிய கால கடன் தரும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்-பில், கடன் பெறுவது மிகவும் சுலபம், இந்த ஆப்பினை, நம் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து அதில் ஒரு கணக்கு துவங்கி, பின்னர் அடையாளத்திற்காக நமது பேஸ்புக் கணக்கு, அல்லது லிங்கெடின் ( Linkedin) கணக்கு, மற்றும் பேன் என், கடைசியாக 3 மாத வங்கி கணக்கு அறிக்கையினை சமர்ப்பித்தால் போதுமானது.

இதில் 10,000 முதல் 1 லட்சம் வரை கடன் பெற முடியும், இதற்கான காலம் 7 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை என்றும் 10,000 ரூபாய்கு ஒரு நாள் வட்டியாக ரூபாய் 9 ஆக நிர்னயிக்கப்பட்டுள்ளது.

இது இளைஞர் பட்டாளத்திற்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்று நிச்சயமாக நம்பலாம், இந்த ஆப்-பினை இதுவரையிலும் 32,000ற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் மாதக்கடைசியில் ஏற்படும் பண நெருக்கடிகளில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் இருக்க இந்த ஆப் உதவும்.

தற்சமயம், இது பெங்களூரில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் 7 மெட்ரோ நகரங்களில் இச்சேவை கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம், டுவிட்டரில் #CashGivingApp ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள: EarlySalary.com
இந்த ஆப்-பினை பதிவிறக்கம் செய்ய: http://bit.ly/erslr
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.