Breaking News
recent

கார், லாரி, பைக் உள்ளிட்ட வாகனகள் உங்களிடம் உண்டா அப்போ இதை படிங்க.!


இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் இன்சூரன்ஸ் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு தொகை நாளை முதல் உயர்த்தப்படுகிறது. 

குறைந்தபட்சம் 9.91 சதவீதத்தில் இருந்து அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்திருப்பது தான் இந்த கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதே போல் நாளை முதல் சுங்க கட்டண உயர்வும் அமலுக்கு வருகிறது. இவ்வாறு பல்வேறு கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தி வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.