Breaking News
recent

வி.களத்தூர் உள்பட குறைவான வாக்குப்பதிவான இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு.!


கடந்தத் தேர்தல்களில் குறைந்த வாக்குப்பதிவான இடங்களில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று வாலிகண்டபுரம், நமையூரில் நடக்கிறது. இதுகுறித்து பெரம்பலூர்மாவட்ட தேர்தல்அலுவலரும், கலெக்டருமான நந்தகுமார் தெரிவித்திருப்பதாவது :

நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக் கும் நோக்கத்தில் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் தங்களதுபெயர் உள்ளதை அறிந்துகொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கலைநிகழ்ச்சிகள், வீடியோ வாகனம்மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடுவது உள்ளிட்ட பல்வேறுவகையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெரம்பலூர்மாவட்டத்தில் கடந்தத் தேர்தல்களின்போது வாக் குப்பதிவு சதவிகிதம் குறைவாகஇருந்த வாக்குச்சாவடி மையங்கள் கணக்கெடுக்கப் பட்டு, அந்தப்பகுதிகளில் 100சதவிகித வாக்குப்பதிவை உறுதிசெய்யக்கூடிய வகையில் பொது மக்களிடத்திலும், இளந் தலைமுறையைசேர்ந்த முதல் வாக்காளர்களிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் வருகிற 20ம்தேதிவரை விழிப்புணர்வு நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சுடர் கலைக்குழுவின்மூலம் இதுவரை பெரம்பலூர்மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் ஆடுதுறை, லப்பைகுடிகாடு, ஒகளூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. செந்துறை ஒன்றியத்தில் குலுமூர், பொன்பரப்பி, செந்துறை, முள்ளுக்குறிச்சி, சிறுகளத்தூர் பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது. இன்று(17ம்தேதி) வேப்பூர் ஒன்றியத்தில் நமையூரிலும், வேப்பந்தட்டை ஊராட்சியில் வாலிகண்டபுரத்திலும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 

நாளை (18ம்தேதி) பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பலூர், துறைமங்கலம், சிறுவாச்சூர் பகுதிகளிலும், 19ம்தேதியன்று வேப்பந்தட்டை ஊராட்சிஒன்றியத்தில் பூலாம்பாடி, அரும்பாவூர், பெரம் பலூர் ஒன்றியத்தில் அரணாரையிலும், 20ம்தேதி வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வி.களத்தூர், அயன்பேரையூர், எறையூர் ஆகியபகுதிகளிலும் புதுவாழ்வுத்திட்டத்தின் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட திட்டமிடப் பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.