Breaking News
recent

கொடுமை அனுபவிப்பதாக ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்ட இந்தியரை கைது செய்த சவுதி போலீஸ்.!


கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவில் தாம் கொடுமைக்கு ஆளானதாக கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அப்துல் சத்தார் என்ற இளைஞர் கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் தண்டேலியை சேர்ந்தவர் ஆவார். இவர் சவுதி அரேபியாவில் அல்கொபர் நகரில் 2014-ம் ஆண்டு முதல் கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். 

இவர் தனக்கு உதவி கேட்டு ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரால் தாம் கொடுமைக்கு ஆளாகி வருவதாக அப்துல் விவரித்துள்ளார். 

கடந்த 23 மாதங்களாக விடுமுறையே இல்லாமல் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர், ஊதியமும் முறைப்படி தமக்கு அளிக்கப்படவில்லை என கண்ணீர் மல்க புகார் கூறியுள்ளார். 

வேலையிலிருந்து விலகி இந்தியா திரும்ப முடியாமல் பாஸ்போர்ட் மற்றம் பணி அனுமதி விசாவையும் கட்டுமான உரிமையாளர் பறிமுதல் செய்துள்ளதாக அப்துல் குற்றம்சாட்டியுள்ளார். 


இணையதளம் மூலம் தமக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த வீடியோவை முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்துலின் இந்த வீடியோவை உலகம் முழுவதுமுள்ள லட்டசக் கணக்கானோர் பார்த்துள்ளனர். 

பிபிசி உள்ளிட்ட பிரபல சர்வதேச ஊடகங்களில் வீடியோ வெளியானதை தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பியதாக அப்துல் சத்தாரை சவுதி போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதனிடையே அப்துலை மீட்டு இந்தியா அழைத்து வரும் முயற்சியில் டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குந்தன் ஸ்ரீவத்ஸவா ஈடுபட்டுள்ளார்.  

நன்றி-தினகரன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.