Breaking News
recent

வளைகுடா நாடுகளில் ரோமிங் கட்டணம் 40 சதவீதம் குறைப்பு: வரும் 1-ந்தேதி முதல் அமல்.!


இண்டர்நெட், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் செல்போன் அழைப்புகளுக்கான கட்டணங்களை 3 ஆண்டுகளுக்குள் குறைக்க போவதாக ஏற்கனவே, சென்ற ஆண்டு ஜூன் மாதம் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சில் தெரிவித்திருந்தது.

வரும் ஏப்ரல் 1-ந்தேதி  முதல் வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன், ஓமன் நாடுகளில் தொலைபேசிகளுக்கான ரோமிங் கட்டணம் 40 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வளைகுடா கூட்டமைப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கவுன்சிலின் துணை செயலாளர் அப்துல்லா பின் ஜூமா அல் சிப்லி தெரிவித்துள்ளார்.

சில வளைகுடா டெலிகாம் நிறுவனங்கள் சவூதி அரேபியா குவைத், பக்ரைன் மற்றும் ஓமனில் செயல்பட்டு வருகின்றன. சவூதி டெலிகாம் கம்பெனி குவைத், பக்ரைனில் இயங்கி வருகின்றன. அதேபோல், குவைத்தை சேர்ந்த செயின் நிறுவனம் பக்ரைன், சவூதி அரேபியாவில் உள்ளன. கத்தாரின் ஓரிடோ நிறுவனம் குவைத் மற்றும் ஓமனில் கிளைகளை கொண்டுள்ளது.

எனினும், இந்த ரோமிங் கட்டண குறைப்பு முடிவில் இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை குறைப்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.