Breaking News
recent

இந்தியாவில் முதல் முறையாக ஓட்டு போடுபவர்களுக்கு 1 லட்சம் அதிர்ஷ்ட பரிசு.!


வாக்குப்பதிவை அதிகரிக்கும் முயற்சியாக, நாட்டிலேயே முதல் முறையாக, ஓட்டு போடுபவர்களுக்கு ₹1 லட்சம் குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் திட்டம் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை போல கேரளாவிலும் மே 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க, கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவரையும் திருப்பி பார்க்க வைத்துள்ளது. கேரளாவின் இளம் மாவட்டமாக கருதப்படும், பத்தினம்திட்டாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது.

இங்கு கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 68.22 சதவீத வாக்குகளும், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 65.67 வாக்குகளும் பதிவாகின. இம்முறை வாக்குப்பதிவை அதிகரிக்க மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஹரிகிஷோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் பதிவான 100 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு, ‘ஓட்டு போடு, வெற்றி பெறு’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்து வாழ்த்து அட்டை தரப்படும். 


அதில் ஒவ்வொரு அட்டையிலும் ஒரு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். பின்னர் குலுக்கல் முறையில், வெற்றி பெற்றவர் தேர்வு செய்யப்பட்டு ₹1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.மேலும், சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோல, ஓட்டு போடுவதற்கு குலுக்கல் பரிசு வழங்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. இதுதவிர 100 வாக்குச்சாவடியிலும் பொதுமக்கள் அனைவர் வீடுகளுக்கும் ஓட்டுபோடுவதை வலியுறுத்தி கடிதமும் அனுப்பப்பட உள்ளது. 

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திரையரங்குகளில் குறும்படங்கள் ஒளிபரபரப்படுகின்றன. சமூக வலைதளம் மூலமாகவும் இளம் வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 


எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகளை வாக்களிக்க அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இந்த மாவட்டம் சபாஷ் போட வைக்கிறது.

நன்றி-தினகரன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.