Breaking News
recent

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தரைப்படையை அனுப்ப தயார் ஐக்கிய அரபு எமிரெட்சு அறிவிப்பு.!


சிரியாயில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தரைப்படையை அனுப்ப தயார் என்று ஐக்கிய அரபு எமிரெட்சும் அறிவித்து உள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தரைப்படையை அனுப்பவும், தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் அமெரிக்கா தலைமையிலான படைகளுக்கு உதவிசெய்யவும், பயிற்சி அளிக்கவும் தயாராக உள்ளோம் என்று ஐக்கிய அரபு எமிரெட்சு கூறிஉள்ளது. 

ஐக்கிய அரபு எமிரெட்சின் வெளியுறவுத்துறை மந்திரி அவார் கார்காஷ் பேசுகையில், ”இது எங்களுடைய நிலையென்று நினைக்கின்றேன்... தீவிரவாதிகளுக்கு எதிரான உண்மையான போரில் தரைப்படையும் உள்ளடங்கியது.” என்று கூறிஉள்ளார். 
 
சவுதி அரேபியா தலைமையிலான அரபு படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகிறது. சவுதி அரேபியாவும் கடந்த வாரம் சிரியாவிற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தரைப்படையை அனுப்ப தாயாராக உள்ளோம் என்று அறிவித்தது.

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சர்வதேச படையின் வேகமில்லாத நடவடிக்கையில் ஐக்கிய அரபு எமிரெட்சு விரக்தியை வெளிப்படுத்தி உள்ளது. 

தரைப்படையை அனுப்ப தயார் என்று சவுதி அரேபியா அறிவித்ததை தொடர்ந்து பேசிய சிரியா வெளியுறவுத்துறை மந்திரி, எங்களுடைய பகுதிக்குள் தரைப்படை அதிகரிப்பதை தடுப்போம், ஆக்கிரமிப்பாளர்களை சவப்பெட்டியில் அனுப்புவோம் என்று கூறினார். 

சன்னி இஸ்லாமியர்கள் அதிகமாக கொண்ட சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சிரியா அதிபருக்கு ஆதரவாக போரிட்டு வரும் ரஷியா கிளர்ச்சியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

சிரியாவின் அலிப்போ நகரை சுற்றிலும் கிளர்ச்சியாளர்கள் கைவசம் உள்ள பகுதியில் ரஷியா தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி எல்லையை நோக்கி செல்லவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். 

சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் வான்படையானது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடும் வீரர்களுக்கு இதுவரையில் பயிற்சி அளித்து வருகிறது. 

இருப்பினும், தரைவழி தாக்குதலுக்கு எந்தஒரு உலகநாடுகளும் விருப்பம் தெரிவிக்கவில்லை. சிரியா மற்றும் ஈராக் ராணுவம் மற்றும் தீவிரவாத குழுவிற்கு எதிரான படைகளுமே தரைவழியாக சண்டையிட்டு வருகிறது.

இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்சு தீவிரவாதிகளுக்கு எதிராக தரைப்படையை அனுப்ப முன்வந்து உள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.