Breaking News
recent

'அல்லாஹ்வின் உதவியால் நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம் - ஹிந்து சிறைக் கைதிகள் உருக்கம்.!


'ஹிந்து' சிறைவாசிகளை விடுவித்த முஸ்லிம்கள்..! "மதங்களை கடந்த மனிதாபிமானம்"

- சிறைத்துறை கண்காணிப்பாளர் பாராட்டு..!

உத்தரப்பிரதேச மாநிலம் 'பரேலி' மாவட்ட சிறையில் அடைபட்டுக்கிடந்த 15 'ஹிந்து' சிறைவாசிகளை முஸ்லிம்கள் நிதி திரட்டி விடுதலை பெற்றுகொடுத்துள்ளனர்.

இதுகுறித்த முழு விவரமாவது :

பரேலி மாவட்ட சிறையில் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை, வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்த 'ஹிந்து' கைதிகள் குறித்த தகவல் கிடைக்கப்பெற்ற பரேலி முஸ்லிம்கள், மேற்படி கைதிகளின் விடுதலைக்காக செயல்பட்டு,15 ஹிந்து கைதிகளை விடுவித்துள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக கைதாகி, தண்டனை காலத்தை அனுபவித்த பின்பு, அல்லது அபராதம் செலுத்த முடியாமல் தொடர்ந்து சிறையில் வாடி வந்த ஹிந்து கைதிகள் செலுத்த வேண்டிய அபராதங்களை செலுத்தி, அவர்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்துள்ளனர், பரேலி வாழ் முஸ்லிம்கள்.

நேற்றுமுன்தினம்(25-11-2015), விடுதலையான, மேற்படி ஹிந்து கைதிகளை சிறை வாசல் வரை சென்று வரவேற்று, அவர்தம் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான பயண ஏற்பாடுகளை செய்து கொடுத்து, அவசியத்தேவைகளுக்கான 'பாக்கெட் மணி'யும் கொடுத்தனுப்பியுள்ளனர் மனிதாபிமானம் நிறைந்த முஸ்லிம்கள்.

ரயில்களில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தல் போன்ற குற்றத்துக்காக ரூ.1,000 முதல், அவரவர் குற்ற செயல்களுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட அபராத தொகைகளை நீதிமன்றத்தில் செலுத்தியதையடுத்து விடுவிக்கப்பட்ட ஹிந்து கைதிகள், முஸ்லிம்களை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு நன்றி செலுத்தினர்.

நந்து கிஷோர், அஜய் குமார், கிஷன் சாகர், பப்பு, திலக் உள்ளிட்ட 15 கைதிகளும் 'அல்லாஹ்வின் உதவியை கொண்டே தாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்'

முஸ்லிம்களின் மனிதாபிமான செயல்களை/ தொடர் நடவடிக்கைகளை பார்த்து மெய்சிலிர்த்த பரேலி மாவட்ட சிறை கண்காணிப்பாளர் "பி.ஆர்.மயூரா" மதங்களை கடந்த முஸ்லிம்களின் மனிதாபிமான செயலை வெகுவாக பாராட்டினார்.

இம்முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சமூக ஆர்வலர் 'ஹாஜி யாசீன் குரைஷி' கூறும்போது :

நாங்கள், எங்கள் சமூக அப்பாவி சிறைவாசிகளின் விடுதலைக்காக செயல்பட்டு வந்த வேளையில், சில அப்பாவி ஹிந்து சிறைவாசிகள் குறித்த தகவலும் கிடைக்கப் பெற்றதையடுத்தே, இந்த களப்பணியில் இறங்கியதாக குறிப்பிட்டார்.

இது விஷயத்தில் 'தொழிலதிபர் அனீஸ்' உள்ளிட்ட மேலும் சில முஸ்லிம்கள் பொருளாதார உதவிகள் செய்ததாகவும் குறிப்பிட்டார் 'யாசீன் குரைஷி'
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.