Breaking News
recent

அரபு நாட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கும்.!


அரபு நாட்டில் வேலை பார்த்தவர்களுக்கு இது சிரிப்பதற்கும், இப்போது வேலை பார்பவர்களுக்கு இது சிந்திப்பதற்கும், இனி அரபுநாட்டுக்கு வர விரும்புகிறவர்களுக்கு உண்மை நிலை புரிவதற்கும்.....அரபு நாடு என்றால் இப்படி எல்லாம்தான்......!!!

1, இங்கே, பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரை விட விலை குறைவு.

2, பல வாரங்களுக்குள்ளில் பெரிய கட்டிடங்கள் கட்டி முடிக்க படும்.

3, படிப்பு இல்லாதவங்களுக்கு....... படித்தவர்களை விட அதிக சம்பளம்.

4,உண்மையான திறமை இருந்தாலும். .ஜால்ரா... அடிக்கிரவங்களுக்குதான் முக்கியத்துவம் வழங்கப்படும்.

5, கம்பனிகளுக்கு,வேலையாட்களை பிடிக்கா விட்டால்...எந்த காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்கலாம்.

6, சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவிகள் கிடைக்கும்.

7, கம்பெனி முதலாளியிடம்,அலுவலக அதிகாரிகளை விட டீ பாய்கும் டிரைவருக்கும் தான் உறவு அதிகமாக இருக்கும்.

8, கட்டிடங்களுக்கு அதன் உரிமையாலனை விட, அதன் காவல்காரனுக்கு அதிகாரம் அதிகமாக இருக்கும்.

9, அரபிகளின் மனசும், அரபு தேசத்தின் சீதோஷ்ண நிலையும் நமக்கு புரியாது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.

10, பாலைவனமாக இருந்தாலும்,எல்லா இடமும் பச்சைபசேலென இருக்கும்.

11, அரபு நாட்டில் நீங்கள் பணம் சம்பாதிக்கா விட்டால், உலகில் எந்த ஒரு மூலையிலும் நீங்கள் பணம் சம்பாதிக்க மாட்டீர்கள்.

12, நேரம் சீக்கிரமாக போகும்,ஒரு வெள்ளிகிழமையிலிருந்து அடுத்த வெள்ளிக்கிழமைக்கு உள்ள தூரம்
ரொம்ப குறைவாக நமக்கு தோன்றும்.

13, எந்த ஒரு கல்யாணம் பண்ணாத வாலிபனின் கனவு, சொந்த மண்ணில் போகும் விடுமுறையும், அவன்
திருமணமும் திருமணம் ஆனவர்களின் கனவு Family விசாவும், அதன் பிறகு வரும் செலவுகளும்.

14, நமக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைவியாபாரிகள் அவர்களுடைய வாகனத்திலேயே நாம்
இருக்கும் இடத்தில் கொண்டு தருவார்கள்.

15, ஒவ்வொரு 5 கிலோமீட்டர் தூரத்திற்கும் ஷாப்பிங்மால் இருக்கும்.

16, நம் நாட்டின் சாலையின் நீளமும், இங்குள்ள சாலையின் அகலமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான்.

17, போக்குவரத்து சிக்னல்கள் பச்சை நிறம் வரும்போது அது இந்தியாகாரனுக்கும், பெங்கால் காரனுக்கும்
போவதற்கு, மஞ்சள் நிறம் வரும்போது எகிப்து காரனுக்கும்,பாகிஸ்தான் காரனுக்கும் போவதற்கு, சிகப்பு நிறம் வரும்போது அரபிகளுக்கு போவதற்காக இருக்கும்.

18. தலையனைக்கு மட்டும் தான் தெரியும் - எங்கள் கண்ணீரின் ஈரம் .

19. படைத்தவனுக்கு மட்டும்தான் தெரியும் எங்கள் வாழ்கையின் பாரம்.

20. மனைவியோடு நேரில்பேசியதைவிட டெலிபோனில் பேசியதுதான் அதிகம்.

21 .அடுத்த மாதம் வருகிறேன் இது -குழந்தைகளிடம் அடிக்கடி சொல்லும் பொய்.

22. ருசிக்காக உண்ணவில்லை பசிக்காக - உண்ணுகிறோம்.

23. நினைவு வந்தால் -உறக்கம் இல்லை அசதி வந்து உறங்குகிறோம் .

24. உடல் மட்டும் இங்கு இருக்கு எங்கள் மனசெல்லாம் ஊரில் இருக்கு.

25. வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...
(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)

எங்களோடு போகட்டும் இந்த நரக வாழ்கை. - எங்க. பிள்ளைக்காவாது அமையட்டும் உள்ளுர் வாழ்கை..
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.