Breaking News
recent

துபாய் பாம் ஜீமைரா தீவில் உருவாகும் உயரமான கட்டிடம்.!


துபாயின் உலக புகழ்பெற்ற‌ பாம் ஜுமைரா தீவு மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகபெரிய செயற்கைத் தீவாகும். இங்கு உலகம் முழுவதுமிருந்து தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு 8 பிரபல ஹோட்டல்களில் சுமார் 3 ஆயிரத்து 500க்கும் அதிகமாக அறைகள் உள்ளது. 

எதிர்காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளதால் பாம் ஜீமைராவில் புதியதாக வணிக வளாகங்கள் தயாராகி வருகிறது .

மேலும் தற்போது திர்ஹம்ஸ் 819மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் 240 மீட்டருக்கு அதிகமான உயரத்தில் 52 அடுக்குகள் கொண்ட பாம் டவர் என்ற மிகபெரிய கட்டிடத்தை உருவாக்க உள்ளதாக பாம் ஜீமைரா தீவை உருவாக்கிய நகீல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யுஏஇ தனியார் கட்டுமான நிறுவனம் இப்பணியை மேற்கொள்ள உள்ளது. இதில் நட்சத்திர ஹோட்டல்,504 ஆடம்பர குடியிருப்புகள்,உணவங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த பிரம்மாண்ட கட்டிடம் அமைய உள்ளது

ஏற்கெனவே 800 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டில் தயாராகி வரும் நக்கீலின் பிரம்மாண்டமான பாயிண்டே வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பிரபல ஷோரூம்கள் அமைய உள்ளது. 

மேலும் 2020-ம் ஆண்டுக்குள் புதிய ஹோட்டல்கள் இங்கு உருவாக்கப்பட்டு 11 ஆயிரம் அறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.