Breaking News
recent

மாட்டிறைச்சி சாப்பிடும், முஸ்லிம்களை அனுமதிக்ககூடாது - இந்தியாவில் மற்றுமொரு சர்ச்சை.!


நவராத்திரி விழாவில் நடக்கும் தாண்டியா நிகழ்வில் முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை என்று குஜராத் மாநில ஹிந்து சங்கதான் யுவ மோர்ச்சா என்ற அமைப்பு அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ரகுவீர் சிங் ஜடேஜா கூறுகையில், " குஜராத் மாநில கட்ச் மாவட்ட பகுதியில் உள்ள மாந்த்வி பகுதியில் எங்களின் யுவ மோர்ச்சா அமைப்பினர் கண்காணிப்பில் ஈடுபடுவர். 

ஏன் எனில் இந்த பகுதிகளில் நடக்கும் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான  கர்பா எனப்படும் தாண்டியா நடன நிகழ்வில் கலந்துகொள்ள  முஸ்லீம்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்தத் தடை குறித்து முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதி ஆசாம் அங்காடியா தெரிவிக்கையில், "எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து இந்தத் தடையை எப்படி எதிர்கொள்வது" என்று முடிவெடுப்போம்  என்று கூறினார்.

கடந்த ஆண்டு வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா, "கர்பா நிகழ்வுகளில் முஸ்லீம்கள் கலந்துகொள்ள அனுமதிக்க கூடாது. ஏன் என்றால் நவராத்திரி விழா அம்பாளை வணங்கும் வழிபாடும் நிகழ்வு. 

அதில் மாட்டிறைச்சி உண்பவர்களை அனுமதிக்க முடியாது" என்று கூறியிருந்தார். பல்வேறு தரப்பினரும் இது தொடர்பாக அப்போதே கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் குஜராத் கட்ச் மாவட்ட பகுதியில்  கர்பா நிகழ்வில் முஸ்லீம்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.