Breaking News
recent

கால் ஊனமானாலும் மனதில் ஊனமின்றி ஹாஜிகளுக்கு உணவு வழங்கும் சவூதி வாலிபர்.!






கால் ஊனமானாலும் கவலைபடாமல் மனதில் ஊனமில்லாமல் ஹாஜிகளுக்கு உணவு வழங்ககும் சவூதி இளைஞர்.

மக்காஹ் அஜிஜியா என்னுமிடத்தில் இந்திய ஹாஜிகள் தங்கும் விடுதி எண்:288 ஹோட்டல் விடுதியின் முன்பாக மிகப்பெரும் தங்கும் விடுதிக்கு உரிமையாளரான முஹம்மத் பின் ஹுசைன் அல்-அத்தாஸ் என்ற பெயருடைய சவூதி இளைஞர் ஒருவர் பார்பதற்கு சிறிது கால் ஊனமாக காணப்படுகிறார் 

ஆனால் தான் மணம் தளராமல் தனது ஹோட்டலின் அருகாமையில் அமைந்துள்ள காலியாக உள்ள ஒரு இடத்தில் சுற்றிலும் இருக்கைகள் அமைத்து தொழுகைக்காக சென்று வரும் ஆயிரகணக்கான 

 ஹாஜிமார்கள் மற்றும் அவர்களை சந்திக்க வரும் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் தினமும் அஷர் முதல் இஷா வரையும் (பன் கேக், 1 தண்ணீர் பாட்டில், 1 ஜூஸ், 1 கப் கேக், 1 பேரித்தம் பிஸ்கட்) அடங்கிய உணவு பொட்டலமும் தேநீரும் இலவசமாக கொடுத்து கண்ணியத்துடன் உபசரிக்கும் வருகிறார்.

 மேலும் அங்கு வந்து செல்லும் அனைத்து ஹாஜிகளிடமும் உங்களுக்கு தெரிந்த மாற்றும் தெரியாத ஹாஜிகலானாலும் சரி அடுத்தமுறை தொழுகைக்கு வரும்பொழுது அழைத்து  வரும்படி சொல்லி அனுப்புகிறார்

 தான் இச்சேவையை  சுமார் 4 ஆண்டு காலமாக தொடர்ந்து செய்து வருவதாக கூறினார் அல்லாஹ் அவரின் இம்மையின் நற் தேவைகளை நிறைவேற்றி மறுமையில் ஜன்னத்துல் பிர்தொஸ் சொர்கத்தில் என்றென்றம் நிலைபெற செய்வானாக ஆமின்






VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.