Breaking News
recent

மாட்டுக்கறி விவகாரம்: முதியவர் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!


உத்திர பிரதேசம் மாநிலத்தில் முதியவர் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் மாட்டிறைச்சி தின்றதாக புரளியைக் கிளப்பி முஸ்லிம் குடும்பத்தினர் வீட்டுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சிலர் முதியவர் ஒருவரை அடித்து படுகொலை செய்தனர்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தை அடுத்து நாடெங்கும் கண்டனக் குரல்கள் எழும்பியுள்ளன. மாட்டிறைச்சி தின்பது கொலைக் குற்றமா? என்றும் ஒரு மிருகத்திற்காக மனிதனையே கொலை செய்வதா? என்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். ஐ.நாவும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டனர். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். 

இதில் அவ்வமைப்பின் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் கண்டன உரை நிகழ்த்தினார்.

இதற்கிடையே இச்சம்பவத்திற்கு ஐ.நா உள்ளிட்ட உலக நாட்டு அமைப்புகள் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் மவுனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.