Breaking News
recent

இந்தியா நாட்டிலேயே முதல் முறையாக காவல் நிலையம் செல்லாமல் புகார் பதிவு செய்யும் வசதி.!


போலீஸ் ஸ்டேசன் செல்லாமல் புகார் பதிவு செய்யும் வசதி அடங்கிய, மக்கள் சேவை இணையதளத்தை, நாட்டிலேயே முதல் முறையாக ஒடிசாவில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று தொடங்கி வைத்தார். 

மக்கள் இணையதள சேவை (இ-போலீஸ்) தொடங்கி வைத்து நவீன் பட்நாயக் பேசுகையில், ‘‘புகார் அளிப்பதற்காக மக்கள் இனிமேல் காவல் நிலையம் செல்ல வேண்டியதில்லை. 

உயர் அதிகாரிகளை சந்திக்க வேண்டியதும் இல்லை. 
மக்கள் சேவை இணையதளத்தின் மூலமாக மாநிலத்தில் உள்ள எந்த போலீஸ் ஸ்டேசனிலும் புகார் பதிவு செய்யலாம். 

அத்துடன் நன்னடத்தை சான்றிதழ், பேரணி மற்றும் ஊர்வலம் நடத்த அனுமதி, குற்றப் பத்திரிகை நகல், நிகழ்ச்சி நடத்த அனுமதி, ஸ்டிரைக், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி என எல்லாவற்றுக்கும் இனி காவல் நிலையம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

மேலும், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் விவரம் சரிபார்ப்பு, பணியாளர்கள் விவரம் சரிபார்ப்பு, காணாமல் போனவர்கள் பற்றிய புகார், சொத்து தொலைந்து போன புகார் ஆகியவையும் பதிவு செய்யலாம். 

புகார்களின் மீதான நடவடிக்கையை அவ்வப்போது இந்த இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.