Breaking News
recent

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்த்தவ பாதிரியாரின், மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்..!






இஸ்லாத்தை அதிகம் வெறுத்தவர்களில் பலர்கள் இந்த .இஸ்லாத்தோடு ஐக்கியமான வராலாறுகள் ஏராளம்

இந்த தொடர் வரலாற்றின் நிகழ்கால சான்றாக மாறியவர்களில் பல்கீரியாவை சார்ந்த கிருத்துவ பாதிரியார் ஜப்ரி குறிப்பிட தக்கவர்

இஸ்லாத்தில் இணைந்து சவுதி மன்னர் சல்மானின் பிரத்தியோக விருந்தாளியாக இந்த ஆண்டு ஹஜ் செய்யவந்த கிருத்துவ பாதிரியார் ஜப்ரி தன்னை பற்றியும் தான் இஸ்லாத்தில் இணைந்தது பற்றியும் கூறுவதை கேளுங்கள் 

நான் தீவிர கிருத்துவன் கிருத்துவத்தை மக்களுக்கு போதிப்பவன் இஸ்லாத்தை முற்றாக வெறுத்தவன் இஸ்லாம் தொடர்ப்பான செய்திகளை படிப்பதையே விரும்பாதவன் ஒட்டு மொத்தத்தில் இஸ்லாத்தின் எதிரிகளில் ஒருவனாகதான் நான் இருந்தேன் 

எனக்கும் சவுதி அரேபியாவை சார்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே வலுவான நட்பிருந்தது 

அந்த நட்பின் பலனாக அந்த நண்பர் எனக்கு திருகுர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இஸ்லாம் பற்றிய சில ஆங்கில குறுந்தகடுகளையும் எனக்கு வழங்கி என்னை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார் 

நான் அதர்கு முக்கியத்துவம் கொடுக்கமல் அவரை கிருத்தவராக மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயலாற்றினேன் 

ஆானால் எனது சவுதி நண்பர் காலித் உறுதியாக இருந்தார் என்னை மாற்றிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்

நண்பர் காலித் என்னுடன் பேசி கொண்டிருக்கும் போது அவரது இஸ்லாமிய நண்பர் இடம் இருந்து தொலை பேசி அழைப்பு வந்தது 

அந்த அழைப்பில் அவரது நண்பர் உம்றாவுக்கு சென்று கொண்டிருப்பதாக கூறினார் அப்பபோது உம்றா என்றால் என்ன வென்று எனக்கு தெரியாது தெரிந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை

சில நாட்களுக்கு பிறகு எனது வாழ்வில் நான் கண்ட கனவு என்னையே புரட்டி போட்டது 

ஆம் தூரத்தில் இருந்து ஒரு கருப்பு பெட்டியை கனவில் பார்த்தேன் அந்த பெட்டியை சுற்றி மக்கள் சுற்றி வந்து கொண்டிருந்தனர் நானும் மக்களோடு மக்களாக அந்த பெட்டியை சுற்றி கொண்டிருந்ததை கண்டேன் என்னுடன் எனது நண்பர் காலிதும் உடன் இருந்தார்

இந்த கனவு எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றியது 
அப்போது தான் இது பற்றி காலிதிடம் கூற முடிவெடுத்தேன் 
அப்போது தான் அவர் நீங்கள் பார்த்தது கருப்பு பெட்டியல்ல இறைவனின் ஆலையம் கஃபா என்றும் அங்கு மக்கள் சுற்றி கொண்டிருப்பது தான் தவாப் என்றும் விளக்கமளித்தார்

அதன் பிறகு காலித் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய திருகுர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை படிக்க தொடங்கினேன் 

நான் திருமறையை படிக்க படிக்க அது என்னை ஈர்த்து கொண்டே இருந்தது 

பைபிளின் போதகரான என்னை திருகுர்ஆன் முழுமையாக கவர்ந்து இழுத்து விட்டது 

சரியாக இரண்டு மாதங்களுக்கு பிறகு நண்பர் காலித் உடன் இறைஇல்லம் ஒன்றிர்கு சென்று என்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன் 

எனது நண்பர் காலித் மட்டும் இன்றி அந்த பள்ளியின் இமாமும் மட்டற்ற மகிழ்ட்சி அடைந்தனர் 
பின்வரும் லின்கை கிளிக் செய்து நமது பக்கத்தை லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்

கடந்த ரமளானில் அந்த பள்ளியின் இமாம் என்னிடம் எனது புகைபடம் ஒன்றையும் பாஸ்போர்ட் நகல் ஒன்றையும் கேட்டு பெற்று கொண்டார்

பெற்று கொண்ட சில தினங்களில் சவுதி மன்னர் சல்மானின் விருந்தினராக நான் ஹஜ் செய்ய தேர்வு செய்ய பட்ட செய்தியை எனக்கு சொன்னார் 

ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணம்எனக்கு இருந்தது ஆனால் இவ்வளவு விரைவாக நடைபெறும் நான் எண்ணி பார்க்கவில்லை எல்லாம் இறைவன் நாட்டமே 

இவ்வாறு அவர் தாம் இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வுகளை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.