Breaking News
recent

துபாயில் கூட்டத்தில் இந்தியில் உரையாற்றியது ஏன்? பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு வாழ் இந்திய அமைப்பு கண்டனம்.!


துபாயில் பிரதமர் மோடி கலந்துகொண்ட‌ கூட்டத்தில் தமிழகம், கேரள உள்ளிட்ட தென்னிந்தியர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எவ்வித மொழிபெயர்ப்புமின்றி முழுக்க‌ ஹிந்தியில் உரையாற்றிய பிரதமர் மோடிக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது

இது குறித்து சர்வதேச‌ காயிதேமில்லத் பேரவை சார்பில் அமீரக பொருளாளர் ஹமீது ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தியில், இரண்டு நாள் சுற்றுபயணமாக யுஏஇ வருகை தந்த பிரதமர் மோடி வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கென எவ்வித திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

தாய் நாட்டிற்கு அந்நிய செலவாணியை அள்ளிதரும் யுஏஇ வாழ் இந்திய மக்களுக்கு குறிப்பாக அடிதட்டு தொழிலாளர்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் அறிவிக்கவில்லை. 

துபாயில் தமிழக தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை சந்திக்க ஆர்வமில்லை. பெரும் முதலாளிகளை சந்திப்பதிலேதான் ஆர்வம் காட்டினார். 

இவர் முதலாளிகளுக்கான பிரதமராகவே அடையாளப்படுத்தி கொண்டார்.

வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் உயிரழந்தார்களானால் அவர்கள் உடலை இந்திய அரசாங்கமே தாயகத்துக்கு எடுத்து வர ஏற்பாடு செய்வது, 

பென்சன் திட்டம், நாடு திரும்பினால் தொழில் கடனுதவி, வெளிநாட்டிலிருந்து அனுப்பு தொகைக்கான கமிஷனை குறைப்பது போன்ற நீண்ட கால‌ கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.

துபாயில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பிரதமர் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான நல திட்டங்களை அறிவிப்பார் என ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆனால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.

துபாயில் கேரள, தமிழகம் உள்ளிட்ட‌ தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஹிந்தியில் பேசியது கடும் கண்டத்துக்குறியது. 

எவ்வித மொழி பெயர்ப்பும் செய்யப்படவில்லை.இச்செயல் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது இந்தி மொழி பேசும் மக்களுக்கு மட்டும் தான் மோடி பிரதமரா? 

இது போன்று குற்றச்சாட்டுக்களை சுட்டிகாட்டும் ஊடங்களையும் முடக்கும் பணியில் மோடி அரசு ஈடுபடுகிறது. அதற்கு உதாரணம் சமீபத்தில் சில‌ ஊடங்களுக்கு அனுப்பபட்ட நோட்டீசாகும்.

 எனவே இது போன்ற செயல்களை நிறுத்தி மக்களுக்கு சேவையாற்றும் அரசாங்கமாக மோடி அரசு திருத்தி கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.