Breaking News
recent

பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேஷன் அட்டை கட்டாயம்: கல்விதுறை அதிரடி.!


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ரேஷன் அட்டை நகல்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2016ல் தொடங்க உள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது.

 தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான சான்றுகள் தயாரிக்கும்போது அதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருக்க பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. 

இதற்கான படிவங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டு அதை பெற்றோரே நேரில் வந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருந்தால் அதையும் கொண்டு வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகம் முழுவதும், பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. 

ரேஷன் அட்டை கொண்டு வந்து அதன் நகல் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், ரேஷன் அட்டையின் எண்ணை கணினியில் பதிவு செய்து கொள்ளுவார்கள். 

அத்துடன் மாணவரின் தேர்வு விவரங்களும் அதில் பதிவு செய்யப்படும். அப்படி செய்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்தில் ஆன்லைன் மூலம் அந்தந்த மாணவர்களின் ரேஷன் எண்களை ஆன்லைன் மூலம் வருவாய் துறைக்கு அனுப்பி சாதிச் சான்று, வருவாய் சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை பள்ளிகளே பெற்றுத் தரும்.

தவிரவும், பொதுத் தேர்வுக்கு பிறகு அதே ரேஷன் அட்டை எண்ணைப் பயன்படுத்தி அந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவையும் பள்ளிகளில் செய்து கொடுப்பார்கள் என்றனர். இது குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது, ‘ சில பெற்றோரிடம் ரேஷன் கார்ட் இல்லை. சில இடங்களில் ரேஷன் அட்டையில் மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. 

எனவே, எந்த அடிப்படையில் ரேஷன் கார்டை தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகின்றனர் என தெரியவில்லை என்றனர். இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

ரேஷன் அட்டையின் நகல்களை இப்போது வாங்கி வைத்துக் கொள்வோம். தேர்வுக்கு பிறகு ஆன்லைனில் ரேஷன் எண்ணை கணினியில் பதிவு செய்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு செய்வோம். இதனால் பல நன்மைகள் உள்ளன.

குறிப்பாக, தமிழக எல்லையோரங்களில் இருக்கும் அண்மை மாநில மாணவர்கள் தமிழகத்தில் படித்து அவர்களின் ரேஷன் அட்டைகள் வேறு மாநிலத்தில் இருந்தால் அந்த வகை மாணவர்கள் தமிழகத்தில்வேலை வாய்ப்பு பதிவு செய்ய முடியாது. 

வெளி மாநிலத்தில் அந்த மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் தமிழகத்தில் அவர்களுக்கு மற்ற பிரிவினர் என்றுதான் சான்று தருவார்கள். 

ஆனால் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதே பிரிவிலேயே வழங்குவார்கள். எனவே ரேஷன் அட்டை முக்கியமாக வேண்டும். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.