Breaking News
recent

நமது வி.களத்தூரில் ரமலான் முடிந்த பிறகு தொடர்ச்சியாக திருமணம் நடைபெறுகிறது நடைபெரும்திருமண தம்பதிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.!


‘அவங்க வீட்டுக்குத் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாம்!’’ 

சினிமாவிலும் நிஜத்திலும் அடிக்கடி இந்த டயலாக்கைக் கடந்திருப்போம். ரிஜிஸ்டர் மேரேஜ் என்பது திருட்டுக் கல்யாணங்களுக்காகவே படைக்கப்பட்டதா என்ன?
‘‘இல்லவே இல்லை…

எல்லா கல்யாணங்களும் ரிஜிஸ்டர் செய்யப்பட வேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்கிறது பதிவுத்துறை. 

‘‘அச்சச்சோ… டீட்டெயிலா சொல்லுங்களேன்!’’ என்றோம், பதிவுத் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வாசுதேவனிடம்…

கடந்த 2009ம் வருடத்துக்கு முன்புவரை பாரம்பரிய திருமணங்களை அரசுப் பதிவகங்களில் பதிந்தாலும் பதியாவிட்டாலும் எந்தச் சிக்கலும் கிடையாது. 

ஆனால், 2009ம் வருடம் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு திருமணச் சட்டப்படி, திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. 

பெண்கள் திருமணம் மூலம் ஏமாற்றப்பட்டு வருவதைத் தடுக்கவே இந்தச் சட்டம். இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்!’’ 

என்றவர், திருமணப்பதிவு பற்றிய தகவல்களைத் தொகுத்தளித்தார்…
எப்படி விண்ணப்பிப்பது?

எந்த ஊரில் திருமணம் நடக்கிறதோ அந்தப் பகுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். எனவே, சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் அதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 

விண்ணப்பத்தை இணையத்தில் டவுன்லோடும் செய்துகொள்ளலாம். தகுதிகள்…திருமணத்தன்று மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும். 

இப்போது, 18 வயது நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அது செல்லாது.

என்னென்ன ஆவணங்கள் தேவை?
திருமணம் நடைபெற்றதை உறுதிப்படுத்த ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். திருமணப் பத்திரிகை அல்லது கோயில்/ சர்ச்/ பள்ளிவாசல் நிர்வாகம் வழங்கும் ஆவணங்களைக் கொடுக்கலாம். 

அது தவிர, முகவரி ஆதாரம், புகைப்பட அடையாளம் மற்றும் வயதுக்கான ஒரு சான்று ஆகியவை அவசியம். இரண்டு சாட்சிக் கையொப்பங்களும் தேவை. 

இவர்களும் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் கணவன், மனைவி இருவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் 4 தேவை.

எவ்வளவு நாட்களுக்குள் செய்ய வேண்டும்?

திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், மேலும் 2 மாதங்கள் அபராதக் கட்டணத்துடன் அவகாசம் தரப்படும்.

எவ்வளவு கட்டணம்?
பதிவுக் கட்டணம் 100 ரூபாய். தாமதமானால், அபாரத் தொகை 50 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். 

ஆனால், நிறையப் பேர் வீணாக இடைத்தரகர்களை அணுகி கூடுதல் கட்டணம் செலவழித்து திருமணத்தை பதிவு செய்கிறார்கள். அது தேவையில்லாதது.

எத்தனை நாட்களில் கிடைக்கும்?
ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் மறுநாளே சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிடும்.
இந்து திருமணப் பதிவு…

தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டம் தவிர, இந்து திருமணச் சட்டப்படியும் திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கு ஒரே நிபந்தனை, 

மணமகனும் மணமகளும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணம் நடைபெறும் பகுதி மற்றும் மணமகன் அல்லது மணமகளின் வசிப்பிடங்களின் அருகில் உள்ள சார்பதி வாளர் அலுவலகங்களில் பதிவு செய்யலாம். 

எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்ய முடியும். ஆறு மாதத்திற்கு மேல் சென்றால், 25 ரூபாய் அபராதம் உண்டு.

தனித் திருமணச் சட்டம்…
2009க்கு முன்னால் நடந்த கிறித்தவத் திருமணங்களையும் இஸ்லாமியத் திருமணங்களையும் ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட் வழியாகத்தான் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். 

இப்போது அவர்கள் அனைவரும் தமிழ்நாடு திருமணப்பதிவு சட்டத்தின் கீழ் வந்துவிடுவார்கள். தற்போது மணமகனும் மணமகளும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டும் அது தனித்திருமணச் சட்டத்தின் கீழ் வரும்.

மணமக்கள் இருவரின் வசிப்பிடங்களின் அருகில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் இது தொடர்பான ஓர் அறிவிப்பு ஒட்டப்படும். 

30 நாட்களுக்குள் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் சான்றிதழ் பெறலாம்.

அடுத்த 60 நாட்களுக்குள் ஆஜராகி திருமணச் சான்றிதழ் பெறவில்லையெனில் அந்த நோட்டீஸ் காலாவதியாகி விடும். 

மீண்டும் சப்-ரிஜிஸ்டருக்கு விண்ணப்பித்து, நோட்டீஸ் ஒட்டப்பட்டு அதன்பிறகே சான்றிதழ் கிடைக்கும்.

 ஒருவேளை மணமக்களில் ஒருவர் இன்னொருவரின் மதத்துக்கு மாறினால், அந்த சான்றிதழ் தந்து, தமிழ்நாடு திருமணச் சட்டப்படி
சுலபமாக பதிவு செய்யலாம்.

கோயிலில் திருமணம்..?
கோயிலில் திருமணம் முடிப்பவர்களுக்கு கோயில் நிர்வாகமே சான்றிதழ் வழங்கும். 

இருந்தாலும், பாஸ்போர்ட் எடுக்கும்போது, தமிழ்நாடு திருமணப் பதிவுச் சான்றிதழை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதால், அந்தச் சட்டப்படி பதிவு செய்து சான்றிதழ் பெறுவது அவசியமாகிறது!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.