Breaking News
recent

காதலி நினைவாக பவித்ராவுக்கு அனைத்து உதவிகளும் செய்தேன்: அடைக்கலம் கொடுத்த வாலிபர் தகவல்.!


மாயமான  பவித்ராவை  மீட்க அவரது செல்போன் எண்ணை போலீசார் கண்டு பிடித்து அதில் பதிவான அழைப்புகளை சோதித்தனர். இதில் ஒருவருக்கு மட்டும் அடிக்கடி பேசியது தெரிந்தது.

அத்துடன் அரக்கோணம் முகவரிக்கு செல்போன் இணைப்பு பெற்றதும் தெரிய வந்தது.

 இதையடுத்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி அரக்கோணம் உப்புக்குளம் பஜனை கோவில்  தெருவை  சேர்ந்த சரவணன் (23) என்ற வாலிபரை பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சுரேந்தர் என்பவர் செல்போனில் இருந்து பவித்ராவுக்கு அடிக்கடி அழைப்பு வந்தது தெரிந்தது.

இதையடுத்து கிண்டியில் இருந்த சுரேந்தரை பிடித்து பவித்ரா குறித்து விசாரித்ததில் அம்பத்தூரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்கிறார். 

அவரை பெண்கள் விடுதியில்  நான் தங்க  வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

உடனே விடுதிக்கு போலீசார் சென்று பவித்ராவை கண்டுபிடித்து வேலூர் கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சுரேந்தர் கூறியதாவது:–

நான் சென்னையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறேன். கடந்த மே மாதம் இறுதியில் அரக்கோணத்தில் உள்ள நண்பர் சரவணனை பார்த்து விட்டு சென்னைக்கு கோவை எக்ஸ்பிரஸ்  ரெயிலில்  இரவு 9 மணிக்கு சென்றேன்.

அதே ரெயிலில் ஒரு அழகான பெண் வந்தார். அவர் தான் பவித்ரா என்பது பிறகு தெரிந்தது. ரெயிலில் சென்னை வரை கண் கலங்கிய படியே வந்தார். 

அப்போதே அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ரெயிலில் சக பயணிகள் இருந்ததால் கூச்சப்பட்டு பேசவில்லை. 

பின்னர் சென்னை சென்ட்ரலில் இறங்கிய பிறகு  சொந்த ஊரான திண்டுக்கல் செல்ல கோயம்பேடு பஸ் நிலையம் சென்றேன். அங்கு  பவித்ரா  தவித்து கொண்டிருந்தார்.
ரெயிலில் பார்த்த அதே பெண் இங்கு நள்ளிரவில் நிற்கிறாரே என்று பேச்சுக் கொடுத்தேன். 

அப்போது எனக்கு வயது 23 ஆகிறது. என்னுடைய தாய்மாமனுக்கு 42 வயதாகிறது.  அவருக்கு  என்னை கட்டாய  திருமணம் செய்து வைக்க பார்க்கிறார்கள். 

அந்த திருமணம் எனக்கு பிடிக்காததால் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் என்றார்.
இப்போது எங்கு தங்குவீர்கள் என்று கேட்டதும் அது தான் தெரியவில்லை என்றார். 

இதையடுத்து அந்த இரவை பஸ்சிலேயே கழிக்க நினைத்து புதுச்சேரிக்கு அவரை அழைத்து சென்றேன்.  மீண்டும்  அங்கிருந்து சென்னை  வந்தோம்.

நான் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உடைகளை மாற்றிக் கொண்டு அம்பத்தூரில் பெண்கள் தங்கும்  விடுதியில்  என்னுடய செலவில் சேர்த்து விட்டேன். 

மேலும் நண்பர்கள் உதவியுடன் அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலைக்கு சேர்த்தேன்.  இரவு நேரங்களில் அடிக்கடி போனில் பேசிக் கொள்வோம்.

நான் கல்லூரியில் படிக்கும் போது பவித்ரா என்ற பெண்ணை காதலித்தேன். இவர் பெயரும் பவித்ரா என்பதாலும் என்னை கவரும் வகையில் அழகாக இருந்ததாலும் காதலி  நினைவாக  உதவி செய்தேன். 

போலீஸ் இவரை தேடுவது எனக்கு தெரியாது.இவ்வாறு சுரேந்தர் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.