Breaking News
recent

இஸ்லாமிய சமூகத்தினரை ஆத்திரமூட்டிய வாட்ஸ் அப் புகைப்படம்: போலீஸ் நிலையம் மீது தாக்குதல்.!


உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் இஸ்லாம் மதத்தை தவறாக சித்தரிக்கும் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வெளியானதை கண்டித்து அங்குள்ள காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாகபானி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமான புகைப்படம் ஒன்றை தமது வாட்ஸ் அப்பில் இருந்து பலருக்கும் அனுப்பியுள்ளார்.

 இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமி்யர்கள், புகைப்படத்தை பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாகபானி காவல் நி்லையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆவேசமடைந்த சிலர் காவல்நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள், போலீஸ் படையுடன் வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 

இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் தீபக் அகர்வால் கூறியதாவது, இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை பரப்பிய நபரை கண்டறியும் பணியில் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

குற்றவாளி கைது செய்யப்பட்டால் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 நாகபானி பகுதியில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அசம்பாவிதங்கள்ஏற்படாதவண்ணம் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.