Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் 294 மாணவ–மாணவிகள் ரூ.9.08 கோடி கல்வி கடன் கேட்டு விண்ணப்பம்: கலெக்டர் தகவல்.!


பெரம்பலூர், ஜூலை 27–கல்விக்கடன் முகாமில் 294 மாணவ, மாணவிகள் ரூ.9.08 கோடி மதிப்பிலான வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட கலெக்டர் (பொ) மீனாட்சி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2015–16 கல்வியாண்டிற்கான பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களுக்கான முதல் கட்ட கல்விக்கடன் வழங்கும் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முகாமில் 4 நபர்களுக்கு கடனுதவி வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் (பொ) மீனாட்சி மற்றும் சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் வழங்கினர்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:–பெரம்பலூர் மற்றும் வேப்பூர்ஒன்றியங்களுக்காக நடைபெற்ற கல்விக்கடன் வழங்கும் முகாமில் ரூ.9.08 கோடி மதிப்பிலான கடனுதவி கேட்டு 294 மாணவ, மாணவிகள்விண்ணப்பித்துள்ளனர். 

இதில் 165 மாணவ,மாணவிகள் பொறியியல் படிப்பிற்கும், 80 மாணவ,மாணவிகள் மருத்துவ படிப்பிற்கும், 50 மாணவ,மாணவிகள் தொழிற்கல்வி படிப்பிற்கும் இதர மாணவ,மாணவிகள் பிறதுறை படிப்புகளுக்கும் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் முறையான ஆவணங்கள், கல்வி தகுதி ஆகியவை சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு விரைவில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். 

தற்போது 4 நபர்களுக்கு கடனுதவி வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க கல்விக்கடன் பெறுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்

 8.8.2015 அன்று வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும், 22.8.2015 அன்று பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம்களை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாமிற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், 

மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் இணையதளத்தின் மூலம் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மின் ஆளுமைதிட்டஒருங்கிணைப்பாளரையோ அல்லது 97885–32233 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.