Breaking News
recent

பஹ்ரைன் நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏறும்.!


பஹ்ரைன் அரசு அத்தியாவசியப் பொருள்களுக்கு மானியம் வழங்கி அதன் விலையைக் கட்டுப் பாட்டில் வைத்துள்ளது. 

 இறைச்சிக்கு மட்டும் 47மில்லியன் தினார் மானியம் வழங்கப் படுகிறதாம். மேலும் மின்சாரம், தண்ணீர் போன்றவைகளுக்கு இதை விட அதிக அளவில் மானியம் வழங்கப் பட்டு வருகிறது. 

 தற்போது நிலவி வரும் ஆயில் விலை சரிவையொட்டி,  அத்தியாவசியப் பொருள்களுக்கு வழங்கப் பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. 

மானியத்தை ரத்து செய்வதால் இவைகளின் விலை உயரும். விலை ஏற்றத்தைச் ஈடுகட்டும் வகையில் பஹ்ரைன் பிரஜைகளுக்கு 

மட்டும் பணம் வழங்கப் படும் என்று அரசு செய்தி தொடர்பு அமைச்சர் அறிவித்துள்ளார். 

இதனால் விலை ஏற்றம் பஹ்ரைன் நாட்டில் வாழும் வெளி நாட்டினரை மட்டுமே பாதிக்கும். 

பஹ்ரைன் நாட்டில் உள்ள 13 லட்சம் ஜனத் தொகையில் பாதிப் பேர் வெளி நாட்டினர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.