Breaking News
recent

உலகின் முதல் முறையாக உபயோகித்தபின், தூக்கி ஏறியப்படும் செல்போன்.!



உலகின் முதல் முறையாக உபயோகித்தபின் தூக்கி எறியப்படும் செல்போனை நியூஜெர்சியை சேர்ந்த பெண் ராண்டிஸ் லிசா ராண்டி அல்ட்ஸ்சல் பேப்பரில் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த செல்போனில் இருந்து ஒருவர் மறுமுனையில் இருந்து பேசுவதை மட்டுமே கேட்க முடியுமே தவிர பதிலுக்கு டயல் செய்து பேச முடியாது. இதில் 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரம் மட்டுமே பேச முடியும். இந்த செல்போன் 3 கிரீடிட் கார்டு அளவு பருமன் ஆனது.

அந்த செல்போன் மிகவும் மெலிதாக இருப்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு அதை இழுத்து கொள்ள முடியும். அதன்பின்னர் அதை உபயோகிக்க முடியாது. அதன்விலை 20 டாலர்ஸ் (ரூ.1,300) மட்டுமே. பேசி முடித்ததும் குப்பையில் வீசாமல் வாங்கிய கடையிலேயே திருப்பி கொடுத்தால் 2 மற்றும் 3 டாலர்கள் (ரூ.150 முதல் ரூ.200) வரை திரும்ப வழங்கப்படுகிறது.

அது 2 முதல் 3 இஞ்ச் நீளம் வரை உள்ளது. அதன் தயாரிப்பு தொழில் நுட்பத்தை அல்ட்ஸ்சல் நியூஜெர்சியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.