Breaking News
recent

பஹ்ரெய்னில் பாதிக்கப்பட்ட பெண், பேஸ்புக்கின் ஊடாக விடுத்த கோரிக்கை (வீடியோ இணைப்பு )



பஹ்ரெய்னில் பணிப்பெண்ணொருவர் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளான நிலையில் பேஸ்புக்கின் ஊடாக விடுத்த கோரிக்கையின் ஊடாக மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவது;

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எபே லூனா (வயது 28) என்ற பெண் பாரெய்னில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் தன்னை தனது முதலாளி மகன் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டதாகவும். தினமும் அடித்து உதைப்பதாகவும் சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஒரு காணொளி மூலம் தெரிவித்து இருந்தார்.

பின்னர் இந்த காணொளி காட்டுத் தீ போல பரவியிருந்தது.  மேலும் பல்லாயிரக் கணக்காணோர் இதனை பகிர்ந்திருந்தனர்.

இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பில்லைன்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து  தூதரக அதிகாரிகளால் அவர் மீட்கப்பட்டுள்ளார். 

 இந்தக் காணொளியில் லூனா தெரிவித்திருப்பது:-

தனது முதலாளியின் போதைக்கு அடிமையான மகன் தன்னை வல்லுறவுக்குட்படுத்தி  விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும் நான் வெளியே வர உதவி செய்யுங்கள், இப்போது நான் மிகவும் பயந்து போய் உள்ளேன். நான் தடுத்ததற்காக 


எனது காலில் அடித்து உள்ளார். அதனால் காலில் காயமேற்பட்டுள்ளது. எனது முதலாளி மகன் என்னை திட்டினார். இதை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்து விடுவதாக மிரட்டினார் என கூறி உள்ளார்.

லூனா இது குறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு ஒரு முறைப்பாடு அளித்து உள்ளார்.இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.