Breaking News
recent

ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?



பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.
அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.

இது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது.

தண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள். அதனால் கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும். 

வாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப் போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது.

பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.