Breaking News
recent

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் பிரம்மாண்ட‌ மீன் தொட்டி மற்றும் கடல்வாழ் உயிரன பூங்கா.!


துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் பிரம்மாண்ட‌ மீன் தொட்டி மற்றும் கடல்வாழ் உயிரன பூங்காதுபாய். உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான துபாய் மால் சர்வதேச அளவில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் ஷாப்பிங்கிற்கு வந்து செல்லும் இடமாகும்
இங்கு வருபவர்களை அதிகம் ஈர்ப்பது இங்கு அமைந்துள்ள மிகபெரிய மீன் தொட்டி மற்றும் நீருக்கடியில் உள்ல கடல்வாழ் உயிரின பூங்காவுமாகும்
Aquarium & Underwater Zoo 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட இது உலகின் மிகப்பெரிய மீன் தொட்டிகளில் ஒன்றாகும். 51 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 11 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பெரிய மீன் தொட்டியில் 33000 வகையான கடல் வாழ் உயிரினங்கள் உள்ளது..
துபாய் மாலின் மூன்று அடுக்கில் இருப்பவர்களும் (8.3 by 32.88 meter (27 by 108 feet) and is 75 centimeters (30 inches) என்ற வகையில் கண்டு ரசிக்கும் படி, கட்டப்பட்டுள்ள வெளிப்புற அக்ரிலிக் பேனல் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த மீன் தொட்டிக்கு நடுவே சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் 48 மீட்டர் தூரம் உள்ளே நடந்து போய் 270 டிகிரி பார்வையில்,தொட்டியில் உள்ள‌ மீன்களையும் கடல் வாழ் உயிரனங்களையும் கண்டு ரசிக்கலாம்
மேலும் பிரத்யோக உடை அணிந்து மீன் தொட்டிக்குள் இறங்கி பயிற்சியாளர் துணையுடன் காணவும் ஏற்பாடுகள் உள்ளது
மீன் தொட்டிக்கு மேலே, துபாய் மாலின் இரண்டாவது அடுக்கில் நீருக்கடியில் கடல் வாழ் உயிரன பூங்கா அமைத்திருக்கிறார்கள். இதில் பல அரிதான் கடல் வாழ் உயிரினங்களை கண்ணாடி தொட்டிகளில் வைத்திருக்கிறார்கள். இங்கு சென்றால் மீன் தொட்டியை மேலே இருந்து கண்டு களிக்க‌ முடியும்.
துபாய் வரும் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.