Breaking News
recent

தயாராகும் சவுதியின் தரைப்படை - அரபு வசந்தம் மதீனத்து வீதிகளை நோக்கி...!!


யெமன் மீதான வான்தாக்குதல்கள் பற்றி இரு தினங்களிற்கு முன் சவுதி பிரஸ் ஏஜென்ஸி தகவல் வெளியிட்டிருந்தது. கூட்டு தாக்குதல் படைகளின் பேச்சாளர் Ahmed al-Asiri இதனை ரியாத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.

 “நாம் இதுவரை 1200 வான்தாக்குதல்களை யெமனின் பல பாகங்களிலும் உள்ள இலக்குகள் மீது மேற்கொண்டுள்ளோம். கடந்த மார்ச் 25 முதல் நேற்றுவரை நாம்பயங்கரவாதிகளையும் அவர்களது இலக்குகளையும் தாக்கியழித்துள்ளோம். எமது மிஷனில் நாம் பூரண வெற்றி கண்டு வருகிறோம்” என்பதே அவரது கூற்றாக இருந்தது. 

மேலும் அவர் கூறுகையில் “நாங்கள் Houthi பயங்கரவாதிகளை மட்டும் இலக்கு வைக்கவில்லை, முன்னாள் அதிபர் Ali Abdullah Saleh-இற்கு ஆதரவாக செயற்படும் யெமனிய இராணுவத்தையும் எமது தாக்குதல் முதன்மை இலக்காக கொண்டிருக்கின்றோம்” என்றார். 

தங்கள் தாக்குதலில் பாரிய இழப்புக்கள் எதிர்தரப்பிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களது முன்னேற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் பெருமிதமாக தெரிவித்திருந்தார். ஆனால் நிகழ்வுகள் சவுதி அரேபியாவின் வான் தாக்குதல்கள் எந்த பெறுமானங்களையும் ஏற்படுத்தவில்லை என்பதை உண்மைப்படுத்துகின்றன. 

மூன்று சவுதி அரேபிய ரோயல் ஆர்மி சிப்பாய்கள் கொல்லப்பட்டதையும் அவர் ஒப்புக்கொண்டிருந்த அதே வேளை Houthi ஷியா மிலீஷியாவிற்கு ஈரானிய உதவிகள் இருக்கின்றன என்பதனை மறுக்கவில்லை. அது போன்றே ஈரான் மீதான குற்றச்சாட்டுக்களையும் அவர் முன்வைக்கவில்லை. 

ஏடன் துறைமுகம், முக்கிய இரண்டு ஜல சந்திகள் போன்றவை Houthi-களின் கட்டுப்பாட்டில் வந்து விடக்கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.  சவுதி அரேபியாவின் பெரும் வான்தாக்குதல்கள் தோல்வியடைந்த நிலையில் அது இப்போது தனது தரைப்படைகளை யெமனின் எல்லையில் நகர்த்தியுள்ளதுடன் எந்த நேரத்திலும் யெமனினுள் உள்நுழையும் தயார் நிலையில் வைத்துள்ளது. 

இதற்கு முன்னரும் அது இரண்டு முறை தனது இராணுவத்தை எல்லைவரை கொண்டு வந்துள்ளது. ஹுஃதிகள் எல்லை கடப்பதை தடுப்பதற்கான இராணுவ நடவடிக்கையின் போதும், அல்-காயிதாவி்ற்கு எதிராக யெமனிய இராணுவம் 2012-ல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது அல்-காயிதா போராளிகள் சவுதியினுள் உள்புகுந்து விடாமல் தடுக்கவும் அது இதனை செய்திருந்தது. 

இப்போது மூன்றாவது முறை. ஆனால் பாரிய தயாரிப்பு. எல்லையில் உள்ள மக்களை பாதுகாக்க என சவுதி அரேபியா கூறியிருந்தாலும் உண்மையில் அது சமகாலத்தில் இரண்டு ஊடுருவல்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. 

தென்யெமனில் எழுந்து வரும் அல்-காயிதாவின் வலுநிலை சவுதி அரேபியாவினுள் அவர்களை செயற்படுவதற்கான சடுதியான களங்களை உருவாக்கும் நிலையுள்ளது. 
அது போன்றே Houthi-கள் நுழைந்தால் ஷியா எழுச்சி ஒன்று போராட்டமாக அந்த தேசத்தினுள் எழும். இவை சவதி அரேபியாவினுள் வோர் லோர்ட்களை உருவாக்கும் சக்தி மிக்கவை.  

சவுதி அரேபிய அரசிற்கு ஹுஃதிகளின் ஊடுருவல், அல்-காயிதாவின் எழுச்சி என்பதனை விடவும் இந்த களபரங்களில் ஐ.எஸ். சவுதியினுள் திறந்த செயற்பாடுகளை மேற்கொள்ளும் எனும் எச்சரிக்கை உணர்வு நிறையவே இருக்கிறது. உண்மயும் அது தான். 

யெமன் மீதான வான் தாக்குதல்கள் என்பது யெமனின் எல்லைகளினுள் முடியும் விவகாரம் அல்ல. இதைத்தான் பல தேசங்களும் எதிர்பார்க்கின்றன. அரபு வசந்தம் மதீனத்து வீதிகளை நோக்கி.....

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.