Breaking News
recent

துபாயில் வெட்டவெளியில் வேலை செய்யும் 4 ஆயிரம் தொழிலாளிகளுக்கு தினந்தோறும் இலவச உணவு: துபாய் அரசு ஏற்பாடு.!


உச்சி வெயில் மண்டையை பிளக்க துபாய் நாட்டின் வனாந்திர பகுதிகளில் பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 

தொழிலாளர்களின் பசி, தாகத்தை தீர்க்கும் வகையில் ’மொபைல் சுகியா’ என்ற திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, வரும் ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை கோடைக் காலத்தில் வெட்டவெளி பகுதிகளில் கூலி வேலை செய்துவரும் வெளிநாட்டு 

தொழிலாளிகளில் 4 ஆயிரம் பேருக்கு சத்து மிக்க உயர்தரமான சிறந்த உணவு, இயற்கை சாறு வகைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட குடிநீர் போன்றவை தினந்தோறும் இலவசமாக வழங்கப்படும்.


இதற்கான ஏற்பாடுகளை துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பணிகளை நிர்வகித்துவரும் துறை செய்துள்ளது. 

இந்த திட்டத்தின்படி, சுமார் 7 லட்சம் தொழிலாளிகளுக்கு இதைப்போன்ற இலவச உணவு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 

எனஇத்துறையின்தர்மகாரியங்களுக்கான மேலாளர் அலி ஹஸன் அல் மர்ஸவுக்கி தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.