Breaking News
recent

குவைத்தை அலங்கரிக்கும் தமிழர்கள்...!



மனிதனுடைய சூழலே அவனுடைய மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது. அத்தகைய மகிழ்ச்சியை குவைத்தியர்களின் இல்லதுக்கு கொண்டு வந்து பாதுகாப்பான அலங்கரிப்பு பணிகளை செய்து தருவதில் தனிசிறப்பு பெற்று வருகின்றர் குவைத் தமிழர்கள்.

இன்டீரியர் டெக்கரேஷனில் முதலிடம் வகிப்பது சுவர் அலங்காரமே. இத்தகைய வால்பேப்பர் விற்பனை நிலையங்கள் ஹவல்லி பகுதியில் நிறைய காணப்படுகின்றன. இந்த தொழிலை சார்ந்த நூற்றுக்கணக்கான

தமிழர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

சுவர்களை பாதுகாக்கவும், அழகுப்படுத்தவும் வால்பேப்ரை தேர்வு செய்யும் போது பணி விரைவில் முடிவடைகிறது.

 பெயிண்ட் அடிப்பதால் ஏற்படும் டஸ்ட் அலர்ஜி மாத கணக்கில் நீடிக்கும்.
வால்பேப்பரை ஒட்டுவதால்,  நீடிக்கும் பெயிண்ட் வீச்சையும் மற்றும் கரையான் தொல்லையை தவிர்க்க முடியும் என்கிறார் இங்கு விற்பனை மையம் நடத்திவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சர்தார் எனும் இப்றாஹிம்.

அறைகளுக்கு ஏற்றவாறு வண்ணமிகு டிசைன்களை கொண்ட 100 சதவீதம் நீரால் கழுவும் தன்மை கொண்ட வால்பேப்பர்களை தேர்வு செய்வதன் மூலம் உறுதியான தரத்தோடு உத்திரவாதத்துடன் உங்கள் வீட்டை அழகுபடுத்த முடியும் என்கிறார் இலங்கை தமிழர் சுரேஷ்.

தமிழர்கள் நம்பகமானவர்கள், திறமையானவர்கள். அதனால் தான் குவைத்தியர்களின் அறை வரை சென்று அலங்கரிப்பு பணிகளை மேற்க்கொள்ள முடிகிறது என்கிறார் பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியை சார்ந்த டெக்கரேட்டர் முஹம்மது ஜகரிய்யா.

டெக்கரேட்டர்  (அலங்கரிப்பாளர்) தௌ.மு.ஜகரிய்யா வின் வேலைபாடுகளில் சில...








VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.