Breaking News
recent

ஒருவருக்கு மரண தண்டனை வழங்கியது சவுதி அரேபியா.!



சவுதி அரேபியாவில் கடந்த 2004ம் ஆண்டு கோபார் நகரில் தீவிரவாத இயக்கம் தாக்குதல்களை மேற்கொண்டது. அந்நகரில் பணியாற்றிய வெளிநாட்டினர் உட்பட 22 பேரை சுட்டு கொன்றது. 

இத்தாக்குதலில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதவிர, பல வெளிநாட்டினரை பணயக் கைதியாக தீவிரவாத இயக்கம் பிடித்து சென்றது. 

இதேபோல், கடந்த 2003 முதல் 2006ம் ஆண்டு வரை சவுதி அரேபியாவில் வாழும் பெரும் பணக்காரர்களையும் வெளிநாட்டினரையும் கடத்தி சென்று கோடிக்கணக்கில் பணயத் தொகையாக பெற்று வந்தது. 

பணயத் தொகை கொடுக்காத வெளிநாட்டினரை அல்கய்தா இயக்கம் கொன்று வந்தது. இதுதொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு அல்கய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் மீது சிறப்பு நீதிமன்ற டிரிப்யூனல்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், தீவிரவாத இயக்கத்தில் செயல்பட்டு வந்த ஒருவருக்கு நேற்று சவுதி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 
இந்த இயக்கத்தை சேர்ந்த மேலும் சிலருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.